Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


சகல தோஷங்களும் நீக்குவார் சுந்தரேஸ்வரர்

Go down

சகல தோஷங்களும் நீக்குவார் சுந்தரேஸ்வரர் Empty சகல தோஷங்களும் நீக்குவார் சுந்தரேஸ்வரர்

Post by oviya Wed Dec 10, 2014 1:16 pm

சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் கோல்வார்பட்டி

மிகவும் பழமை வாய்ந்த இந்தக் கோயில் வானோருக்கும் இமையோர்க்கும் இன்பம் தந்தது என்று அறிகையில் நமது உள்ளம் ஆனந்தம் அடைகின்றது. எப்படிப்பட்ட தோஷம் இருந்தாலும் சிவபெருமானின் வலப்புறம் ஆற்றலுடன் அருள்பாலிக்கும் அம்பாள் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தால் அத்தோஷம் விலகி ஓடும் என்பது சித்தர் தம் வாக்கு.

‘‘இடப்புறத் துறையுஞ் சக்தி யிடமாறி
நின்றருள் புரிய புகுந்து ஆராதனை
செய்வார் தம் வினைப்
பயனுடனே தோஷம் பலவுங் கருக...’’

-என்ற புலிப்பாணியின் பாடல் வரிகள் உணர்த்துகின்றன. அப்படி இடப்புறம் இருக்கும் பார்வதி தேவியானவர், சிவபெருமானின் வலப்புறம் நின்ற கோலத்தில், கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் தலமே இந்த சாத்தூர் வட்டம், கோல்வார்பட்டியில் உறையும் மீனாட்சி அம்மன். கையில் மீனாட்சி கிளியை ஏந்தவில்லை. மாறாக தாமரை மலரை ஏந்துவது திருமகளின் கடாட்சத்தை நல்கவும் மங்களமான வாழ்வு அமையவுமே என பேசுகின்றார், மூலமுனிச் சித்தர்.

‘‘கரமதனிலே கமலங்கொண்டாரை
ஏகதச வாரந் துதித்து கடை
யாகஞ் செய்வார்க்கு தீர்க்கமாய்
மங்கள மாங்கல்ய பாக்யஞ்
சித்திருமெய்யே’’

-என்ற பாடல் மூலம், மீனாட்சி அம்மன் கரத்தில் தாமரை மலரை ஏந்தி நிற்கின்றார். பதினோரு வாரங்கள் வணங்கி, கடைசி வாரத்தில் ஹோமங்கள் செய்து நிற்பவருக்கு, தீர்க்க சுமங்கலியாய் வாழும் பாக்யம் கிடைக்கின்றது என்று தெரிகின்றது.

‘‘முழுமதியதனிலே சோதி தீபமெடுத்து
பின் பிரகாலத்தே ஆவமுதால் தீபாராதனை
செய்வார் தம்வம்சம் வ்ருத்தியோடு கல்வி கேள்வி ஞானச் செல்வத்தோடு கீர்த்தி
கொண்டிருப்பாரே’’

-என்ற கொங்கண சித்தர் பேச்சை விளக்குகையில், பௌர்ணமி தினத்தில் தீபமேற்றுதலும் பிரதோஷத்தில் பசுநெய் தீபமேற்றி தொழுவதினாலும் புத்திசாலித்தனமும் மனதைரியமும் உடைய, சகல கலைகளிலும் முன்னேறக் கூடிய குழந்தை பாக்யத்தினால், தொழுபவர் தம் வம்சம் விருத்தி அடையும் என்று அறியலாம்.

‘‘கணநாதனைக் கண்ட
கண்கள் மற்றொன்றை காணுமோ?
பாம்பிரண்டுமுடனே கூடிய
பெருமானை ஆராதிக்க
வரவ தோசமது நாசமாகப்பாரே’’

-என்ற பாம்பாட்டி சித்தர் வாக்கால், விநாயகப் பெருமான், ராகு-கேது என்ற இரு பாம்பு கிரகங்களுடன் அருள்பாலிப்பதனால், இவரை ஆராதிப்ப வர்க்கு நாகதோஷம் தவிடு பொடி ஆகும் என அறியலாம்.

‘‘கலங்காமனத்தக மன்னனும் கலங்கி
சிவனடி சேவிக்க, செயமே பெற
சக்தி மாற்றமுடை அம்பலந்தொழுது
பின் புனரோத்தாரனமற்ற செயமெந்நாளுமே’’

-என்ற புலிப்பாணி சித்தர் வாக்கில் பல செய்தி கள் தெளிவாகின்றன. கலங்காத மன்னன் என்று எட்டையபுரத்தை தலைமை இடமாக கொண்டு ஆண்டு வந்தார் கண்டப்ப நாயக்கர் எனும் சிற்றரசர். பற்பல போர்களில், தன் கோள் நிலை தோஷங்களினால் தோற்று நின்றார். அப்போது அவர் செவி களில் ஓர் அசரீரி கேட்டது. அம்பாள் எந்தக் கோயிலில் சிவபெருமானின் வலப்புறம் குடிகொண்டு நிற்கின்றாரோ, அக்கோயிலை சீரமைத்தால், தோஷம் விலகி வெற்றி கிட்டும் என்றது அசரீரி.

அவர் ஆட்சிக்கு உட்பட்ட, சாத்தூர் (மதுரைக்கு அடுத்து) வட்டம் கோல்வார்பட்டியில் குடிகொண்ட, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் அமைப்பை போன்று இருந்த சிற்பக்கலை அம்சம் நிறைந்த இந்தக் கோயிலை புனரமைப்பு செய்து குடமுழுக் காற்ற, அம்மன்னனைப் பற்றிய பன்னிரு வகையான தோஷங்களும் பீடைகளும் அகன்றன. பின் வெற்றிமேல் வெற்றி சூடி, வானுலகம் சென்றான் எ ன்ற செய்தியை நாடியில் விவரித்த அகத்தியர், இக்கோயிலின் பெருமையை மேலும்,

‘‘நந்தனாருக்கு தள்ளி நின்ற
நந்தீசன் யீண்டும் தள்ளியே
நின்று பக்தர் தமை நந்தனென
யெண்ணியே கொலுவிருக்க’’

-என போற்றுகின்றார். இங்குள்ள நந்தீஸ்வரர், சிவபெருமானுக்கு நேர்முன் இல்லாது சற்று ஒதுங்கி எல்லா பக்தர்களுக்கும் நந்தனாரை போலவே பாக்யம் கிட்டட்டும் என பிரார்த்திக்கின்றார்.

‘‘சதுராந் திதி முழுமதி பின்னே
கணநாதருக்கு பன்னாவித
திரவியத்தால் அபிடேகமாற்றி
வத்திரத்தோடு படையலிட்டு
அருச்சிக்க சர்ப்ப தோஷமோடு
முன்னைவினை முற்றிலுமாறுபடாரே!’’

-என்ற குதம்பை சித்தர் வாக்கு போற்றத்தக்கது. சங்கடஹர சதுர்த்தி திதி அன்று விநாயக மூர்த்திக்கு பலவிதமான அபிஷேகங்களை செய்து, வாசனை மிகுந்த மலர்களுடன், வஸ்திரம் சாத்தி, சுவையான நைவேத்யமோடு அர்ச்சிப்பவருக்கு சகல தோஷங்கள் அகலும். நாக தோஷம் தன் னோடு பூர்வவினை கேடுகள் முழுவதும் நீங்கும் என்ற பொருளுடன் கூடிய பாடலை கேட்க உள்ளம் இன்பமடைகிறது அன்றோ! இங்குள்ள பைரவ மூர்த்தியை ஞாயிற்றுக் கிழமைகளில் தொழுது, செம்பருத்தி பூ மாலை சாத்தி நெய் தீபாராதனை செய்தால், விஷக்கடி, நாய்க்கடி போன்ற சங்கடங்கள் வராது ஒழியும் என்று அழுகணி சித்தர் பாடுகின்றார்.

‘‘கெட்டிபொம்மு கொண்டாடிய
பைரவ மூர்த்தி தமை செம்மலராலாராதிப்பார்
தமக்கோர் பைரவ வாதனையிலாதொழி
வதல்லாது நெய் தீபாராதனை செய்வார்
நஞ்சால் மாள்வதில்லை யறிவீரோ’’

-என்ற செய்யுளால் அறியலாம். இங்கு குடிகொண்டுள்ள தட்சிணாமூர்த்தி மிகுந்த வரப்பிரசாதி. வெள்ளையத் தேவனை தெருவில் கண்டு எடுத்து வளர்த்த வீரபாண்டிய கட்ட பொம்மன் என்ற அரசன், அவனுக்கு வீரமும் தைரியமும் வர இந்த தட்சிணாமூர்த்தியை ஆராதித்தார் என மட்டுவ மகரிஷி எனும் சித்தர் பேசுகின்றார். இவர் பாபாஜியின் குருவும் ஆவார்.

‘‘தேவனுக்கு விவேகமும்
வீரமுங் கூட்டிய தேவனார்
பண்பும் பற்றுங் கொள்ள
கருவானார் மூர்த்தியுள் முதலாம்
தட்சிணாமூர்த்தி தாமே’’

-என்ற பாடல் நம்மை மெய்சிலிர்க்க செய்கின்றது. ஆம், பாஞ்சாலங்குறிச்சி அரசன் வீரபாண்டிய கட்டபொம்மன் தொழுத கோயில் இது. இவர் இக்கோ யிலை செப்பனிட்டு பக்தியோடு பராமரித்து வந்தார் என்றும் உணருகிறோம். இங்கே ராமர்-சீதை-அனுமன் ஒரே கல்லில் நேர்த்தியாய் சமைக்கப்பட்டுள்ளமை சிறப்பு. இதனை அகத்தியர் உள்ளிட்ட சித்தர்கள் அரூபமாக இன்றும் ஆராதித்து வருவதாக ‘குமாரகேசன்’ என்ற அண்மைகால சித்தர் - இவர் கருவூர் சித்தரின் தாசன் - பேசுகின்றார்.

‘‘அப்பசி அன்னாபிஷேக மதனிலு
மடுத்த மகா சிவஇராப் போதும்
மாதமுழுமதி முழுதுமே சித்தரெல்லாங்
கூடி அரூபமாயாராதிக்க, கருவூரார் காட்ட
கண்டின்புற்றோமே’’

-என்ற வரிகள் நமக்கு புத்துணர்ச்சியையும் நம்பிக்கையையும் ஊட்டுகின்றன. ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் வெகு விமரிசையாய் கொண்டாடி, பின் மகா சிவராத்திரியில் அன்பர்கள் உறங்காது சிவநாம கீர்த்தனை செய்து இன்புறுவர். பௌர்ணமி தினத்தன்று சிவனடியார்கள் பொங்கும் கடலைப்போல மனத்தில் இன்பம் பொங்க சிவனை ஆராதிப்பர். இக்காலங்களில் அரூபமாக வாழும் வானுறை சித்தர்களும் இந்தத் திருத்தலத்தில் எழுந்தருளி சிவபெருமானை, மீனாட்சி சொக்கநாதனை ஆராதனை செய்யும் வைபோகத்தை கருவூர் சித்தர் காட்டித்தர, கண்டு இன்பம் எய்தினமே என்ற பொருள் நாம் பிறந்த பிறப்பை, எடுத்த பிறவியை அர்த்தமுள்ளதாக்குகின்றது அல்லவா?

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum