Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


நல்ல குழந்தைப் பேறளிக்கும் நட்டாத்தி அம்மன்

Go down

நல்ல குழந்தைப் பேறளிக்கும் நட்டாத்தி அம்மன் Empty நல்ல குழந்தைப் பேறளிக்கும் நட்டாத்தி அம்மன்

Post by oviya Wed Dec 10, 2014 1:18 pm

சுமார் இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன் கொற்கை மாநகரம் சீரும் சிறப்புமாக விளங்கியது. விவசாய பெருமக்கள் மிக அதிகமாக வாழ்ந்து வந்தனர். விவசாயத்தோடு கால்நடைகளும் வளர்த்து வந்தனர். யாதவ மக்கள் தேவைக்கும் அதிகமாக பால் கறந்தனர். தங்களை நம்பி இருப்போ ருக்குக் கொடுத்து விட்டு மீதியுள்ள பாலை விற்பனை செய்வதற்காக அந்தணர்கள் வாழ்ந்த பெருங்குளத்திற்கு சென்று வந்தார்கள். தாமிரபரணி ஆற்றை கடந்துதான் அவர்கள் செல்ல வேண்டும். ஆற்றுக்குள்ளேயே தலைச் சுமையாக பாலை கூடையில் வைத்து எடுத்துச் சென்றனர்.

அப்படி அவர்கள் வரும்போது நடு ஆற்றில் ஒரு கல் இவர்கள் காலைத் தட்டியது. கொண்டு வந்த பாலெல்லாம் தாமிரபரணி நதிக்கே அபிஷேகமானது. எனவே, அவர்கள் பெருங்குளத்திற்குச் செல்லாமல் இடையிலேயே ஊர் திரும்பினார்கள். ஏதோ ஒருநாள் மட்டும் நடந்தால் அதை தற்செயல் என லாம். ஆனால், இந்தச் செயலோ அடுத்தடுத்து தினமும் நடந்துள்ளது. இதனால் மனவருத்தம் அடைந்த மக்கள் ஊரில் வந்து பெரியவர்களிடம் சொன் னார்கள். உடனே பெரியவர்கள் ஊரிலுள்ளவர்களை அழைத்துக்கொண்டு அந்த இடத்திற்குச் சென்றார்கள். தங்களுக்கு இடையூறாக இருந்த அந்தக் கல்லைத் தேடினார்கள். ஒரு சிலை கிடைத்தது. அதைக் கொண்டுபோய் கரையில் வைத்தார்கள்.

அந்தப் பகுதியிலுள்ள மக்களின் கனவில் அம்மன் தோன்றினாள். ‘‘நான் ஆற்றங்கரையில் இருக்கிறேன். எனக்கொரு கோயிலை கட்டி வணங்குங்கள். நான் உங்களை காப்பாற்றுகிறேன். மேலும் நான் நடு ஆற்றில் கிடைத்த காரணத்தினால் என்னை நட்டாற்று அம்மன் என்றே அழையுங்கள். நான் உங்களுக்கு வேண்டிய வரம் தருவேன்’’என்றாள். அதன்படி மக்கள் நட்டாற்று அம்மன் என்கிற நட்டாத்தி அம்மனுக்கு கோயில் அமைத்தனர். முதலில் கோயிலை ஓலை குடிசைக்குள் அமைத்தார்கள். ‘நட்டாற்று அம்மன்’ என்றும் ‘நட்டார் கொண்ட அம்மன்’ என்றும் ‘நட்டார் அம்மன்’ என்றும் அன்னையை அழைத்தனர்.

பக்தர்கள் மிக அதிகமாக கூடினார்கள். 1108ம் ஆண்டு ரோகிணி நட்சத்திரம் அன்று கற்கோயில் நிர்மாணித்தார்கள். அதன் பின்னர் மிகப் பிரமாண்டமான கோயிலாக இந்தக் கோயில் தற்போது மாறிவிட்டது. இந்தக் கோயிலில் விநாயகர், பெருமாள், சக்தியுடன் கூடிய சிவலிங்கம் ஆகிய பெருந்தெய்வங்களோடு, வீரபத்திரர், பைரவர், பெரியசாமி, ஆண்டான் கவிராயர், பேச்சியம்மை, மாடன், மாடத்தி, கருப்பசாமி, பட்டாணிச்சாமி என்று துணை தெய்வங்களும் குடியிருக்கின்றனர். இங்கே ஆண்டான் கவிராயர் சிலை ஒன்றும் உள்ளது. இவர் பல வசவுகளை கவிதையாக சொல்ல கூடியவர்.

இளமையில் இவருக்கு கல்வி வரவில்லை. அதன்பின் உலகம்மனிடம் கல்வி தருமாறு வேண்டியுள்ளார். அவர் தவத்தின் பயனாக அம்மை அவரது நாவில் வேப்பங்குச்சியில் எழுதி, கவி இயற்றும் ஆற்றலை கொடுத்தாள். இவர் போகும் இடங்களிலெல்லாம் கோபத்தோடுதான் இருப்பார். ஒருநாள் தேவி நட்டாத்தியம்மன் கோயிலுக்கு இவர் வந்தார். உடனே, அப்படியே சாந்தமாகிவிட்டார்! அது மட்டுமல்ல, இங்கேயே அமர்ந்து வருபவர் களுக்கு நல்ல சொல் கூற ஆரம்பித்து விட்டார். எனவே அவருக்கு இங்கே சிலை அமைத்து வணங்க ஆரம்பித்தார்கள். இவரை வணங்கினால் எந்த சாபமும் நம்மைத் தாக்காது என்பது ஐதீகம். இந்தக் கோயிலில் பட்டாணிச் சாமியார் சந்நதி ஒன்றுள்ளது. அவர் குதிரையில் அமர்ந்திருக்கிறார்.

கோயிலின் தலவிருட்சம் வேப்பமரம். தீர்த்தம் தாமிரபரணி ஆறு. அம்மனுக்கு சிம்மம், சிவபெருமானுக்கு காளை, திருமாலுக்கு கருடன் வாகனங்களாக உள்ளன. கருவறை மேல் தளத்தில் ஐந்தரை அடி உயரத்தில் விமானம் அமைந்துள்ளது. அதில் மூன்று கும்பங்கள் உள்ளன. தேவி நட்டார் அம்மன் தன் தங்கையாகிய குரங்கணி முத்து மாலை அம்மனுக்கு அருள் செய்துள்ளதாக வரலாறு உண்டு. இந்தப் பகுதியில் குரங் கணி முத்துமாலையம்மன், சிவகளை முப்பிடாதி அம்மன், புதியம்புத்தூர் பத்ரகாளி அம்மன், நட்டாத்தியம்மன் உட்பட ஆறு அக்காள் தங்கைகள் உள்ளனர். இதில் மூத்தவர், ஸ்ரீதேவி நட்டார் அம்மன்.

குரங்கணியம்மனுக்கு நிறைய குழந்தைகள் இருந்தன. ஆனால், நட்டாத்தி அம்மனுக்கு குழந்தை கிடையாது. ஒருநாள் தனது தங்கையையும் குழந்தைகளையும் பார்க்க விரும்பி, நட்டாத்தி அம் மன் ஆற்றை கடந்து குரங்கணிக்கு வந்துள்ளார். குரங்கணி அம்மனுக்கு நட்டாத்தி அம்மன் மீது சந்தேகம். குழந்தை இல்லாத காரணத்தினால் தமது குழந்தைகளின் மீது கண் போட்டு விடக்கூடாது என்று நினைத்தாள். ஆகவே தன் குழந்தைகள் அனைவரையும் பெரிய நெற்குதிருக்குள் புகச் செய்து, மூடி விட்டாள். ஆசையோடு வந்த நட்டாத்தி அம்மன், ‘‘குழந்தைகள் எங்கே?’’ என்று கேட்டார். அதற்கு குரங்கணி அம்மன்,
‘‘விளையாடப்போய் விட்டனர்’’ என்று பொய் சொல்லி விட்டாள்.

நட்டாத்தி அம்மன் தங்கை பொய் சொல்கிறாள் என்று தெரிந்து கொண்டாள். அவளிடம் வீட்டுக்குப் போய் வருகிறேன் என்று கூறி விட்டு தாமிரபரணி கரைக்கு வந்தாள். குரங்கணியம்மன் ஓடிப்போய் நெற் குதிரை திறந்து பார்த்தாள். அங்கே குழந்தைகள் அனைவரும் மூச்சுத் திணறி இறந்து கிடந்த னர். தவறை உணர்ந்து அழுது கொண்டே தாமிரபரணி கரைக்கு வந்தார் குரங்கணி முத்துமாலையம்மன். தன் சகோதரியிடம் நடந்த விவரத்தினை கூறினார். நட்டாத்தி அம்மன் சிரித்துக்கொண்டே, ‘‘நானே என்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு குழந்தைவரம் தருபவள். நானா உன் குழந்தையை அபகரிக்கப் போகிறேன்? என்னைப்போய் தவறாக நினைத்து விட்டாயே’’ என்று கூறி விட்டு குழந்தைகள் உயிர் பிழைக்க வழியைச் சொன்னாள்.

வெள்ளிச் சொம்பு, வெள்ளிச் சிலம்பு, திருநீற்றுக் கொப்பரை, அரளிப்பூ முதலியவற்றை கொண்டு வரச் சொன்னார். தாமிரபரணி ஆற்றுத் தீர்த்தத்தை வெள்ளிச் சொம்பில் எடுத்துக் கொண்டு வந்து அதில் அரளிப் பூவையும் வேப்பிலையையும் ஒடித்துப் போட்டாள். அதன்பின் நெற் குதிருக்கு அருகே வந்து தீர்த்தத்தை தெளித்து வெள்ளிச் சிலம்பால் குழந்தைகளை தட்டி எழுப்பினார். என்ன ஆச்சரியம் குழந்தைகள் அப்படியே எழுந்து விட்டன. அதன் பின்னர், திருநீற்றைப் பூசி,
‘‘பல்லாண்டு காலம் வாழ்க’’ என்று ஆசி கூறி புறப்பட்டாள். இந்தச் சம்பவம் நடந்த பிறகு குரங்கணி தாமிரபரணி கரையில் நட்டாத்தி அம்மனுக்கு கோயில் அமைத்துள்ளனர்.

நட்டாத்தி அம்மனுக்கு பூஜைகள் செய்த 60 நாட்கள் கழித்துத்தான் குரங்கணி அம்மனுக்கு கொடை விழா நடத்துகிறார்கள். குழந்தை வரம் தருவதில் நட்டாத்தி அம்மன் ஈடு இணையற்றவள். அதே போல் திருமணத் தடை நீங்க இந்தக் கோயிலுக்கு பலரும் வருகிறார்கள். ஏழு செவ்வாய்க்கிழமைகள் அம்மனுக்கு செவ்வரளி மாலை சாத்தினால் திருமணம் நடைபெறும். அரசு வேலை வேண்டி அம்மனை வணங்குகிறார்கள். வேலை கிடைத்து மீண் டும் வந்து வணங்கி நன்றி தெரிவிக்கிறார்கள். குழந்தைகள் நன்றாக வளர வேண்டும் என்று ஸ்ரீதேவி நட்டார் என்று குழந்தைகளுக்கு பெயரிடுகின்றனர் பக்தர்கள்.

கோயிலுக்குள் நுழைந்தவுடன் மகா மண்டபம் உள்ளது. அந்த மகா மண்டபத்தில் சிற்பங்கள் நிறைந்து கிடக்கின்றன. பல எண்ணிக்கையில் காணப்ப டும் அந்த சிற்பங்கள், பல புராண காட்சிகளை நமக்கு நினைவுறுத்துகின்றன. பல தெய்வீகத் தோற்றங்களைக் காட்டுகின்றன. எழிலார்ந்த அந்த சிற் பங்களை நாளெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம்! கர்ப்பக் கிரகத்தில் அம்மன் எட்டுக் கைகளுடன் விரிசடையுடன் வீற்றிருக்கிறாள். இடது கால் மகிஷாசுரன் தலையிலும் வலது கால் குத்துக்காலிட்டும் அமர்ந்த கோலம்.

எட்டுக் கைகளிலும் சூலம், வேதாளம், கட்கம், உடுக்கை, கயிறு முதலான ஆயுதங்களைத் தரித்திருக்கிறாள். திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் திருச்செந்தூரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் தூத்துக்குடியிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது ஏரல் கிராமம். கோயில், ஏரல் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. ஆலயத் தொடர்புக்கு: 9443562513.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum