Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


நல்ல தொழில் அமைய, அமைந்த தொழில் சிறப்படைய...

Go down

நல்ல தொழில் அமைய, அமைந்த தொழில் சிறப்படைய... Empty நல்ல தொழில் அமைய, அமைந்த தொழில் சிறப்படைய...

Post by oviya Sun Dec 07, 2014 9:29 am

சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில்

தடைகளைத் தகர்த்தெறிந்து, எல்லா சோதனைகளிலும் நம்மை வெற்றி பெறச் செய்யும் கடவுள், விநாயகரே! பற்பல பெயர்களுடன் பற்பல தலங்களில் கோயில் கொண்டுள்ள போதும், திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டையில் இவர், மிகுந்த சிறப்புகளைத் தாங்கி கோயில் கொண்டு, பக்தர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக சித்தர்கள் சூளுரைக்கின்றனர். மிகவும் பழமை வாய்ந்த நகரம் திருச்சிராப்பள்ளி. இங்கு அமைந்துள்ள ‘மலைக்கோட்டை’ தேவர்களால் துதிக்கப்படுவது என்பதை அறிகையில், மெய்சிலிர்க்கிறது. ஆம், கோரக்கர் என்னும் சித்தர்,

‘‘ஆதி சேடனுமாஞ்சனேயனுங்
கொண்டாடுங் குன்று - தேவர்கள் தங்
கரங்கொண்டு நானாவித பூசைகள் புரிந்து
போற்றுங் கிரி’’

-என்கிறார். மகாவிஷ்ணுவின் படுக்கையாக அமைந்த ஆதிசேஷன் என்ற மகாபலம் பொருந்திய தேவனுக்கும் வாயு பகவானுக்கும் எழுந்தது கருத்து மோதல். இந்த பலப்பரீட்சையில், ஆதிசேஷன் தனது உடலால் மகாமேரு என்ற மாமலையை சுற்றி சற்றே இறுக்க, மகாமேரு மூன்று குன்றாக உடைந்து தெறித்து மூன்று வெவ்வேறு இடங்களில் விழ, வாயு பகவானோ, ‘‘மகாமே ருவை சாமான்ய மனிதரும் தொழவேண்டும் என்பதற்காக ஆதிசேஷனுடன் போட்டி என்று தாம் கையாண்ட யுக்தி இது’’ எனக்கூறி, ஆதிசேஷனின் பலத்தை போற்றி நின்றான். அப்படி மூன்று பங்காக தெறித்து விழுந்த மகா மேருவின் ஒரு படிவமே மலைக்கோட்டை ஆகும். பிரிதொன்று காள ஹஸ்தி. மூன்றாவது, திரிகோணமலை.

இது யாழ்ப்பாணத்திற்கு அண்மையில், லங்காபுரியில் உள்ளது. ஆக மலைக்கோட்டை மலையைக் கண்டு கைகூப்பித் தொழுதக்கால் மேருமலையை தொழுத புண்ணியமும் க்ஷேத்திராடனப் பலனும் சேருகிறது என்கின்றார் சட்டைமுனிச் சித்தர்.

‘‘மகாமேரு தன்னை தொழுதற்கோர்
இமயமேக வேண்டா - கேளீர்
நன்றே காற்றின்வேந்தன் கருணை
சீரபுரம் விரிய நின்றகிரி காண்டுத்தொழ
புண்ணியமே’’

-என்றார். காற்றின் வேந்தன் என்பது வாயு பகவானைக் குறிக்கும். சீரபுரம் என்பது திருச்சிப் பட்டினம் என்பதாகும். முன்னொரு சமயம், திரிசிரன் என்ற அரக்கன் சிவலிங்க பூஜை புரிந்து, சிவபெருமானிடம் பற்பல வரங்களை பெற்றான். அவன் தபசு புரிந்த தலம், அவனது பெயராலேயே தேவர்கள் அழைக்க, திரிசிரபுரம் என வழங்கலாயிற்று. கயிலாயத்தை உத்திர கயிலாயம் என்றும் திரிசிரபுரத்தை தட்சிண கயிலாயம் என்றும் சித்தர்கள் கொண்டாட, ரிசபாசலம், சீராப்பள்ளி என்றும் அடியவர்கள் அழைக்க இன்று ‘திருச்சிராப்பள்ளி’ என விளங்கும் இங்கு, ராவணனின் தம்பி விபீஷணர், ராமபிரானின் பட்டாபிஷேக விழாவில் பங்குகொண்டபின், ராமனிடமி ருந்து திருவரங்க விமானத்தை பெற்று, இலங்காபுரி நோக்கி பயணிக்கையில், காவிரியில் நீராடி, காலை கடன்களை கழிக்க எண்ணமிட்டார். அரங்க விமானத்தை தன் இருப்பிடமன்றி வேறெங்கும் வைக்கக் கூடாது என்ற ரிஷிகளின் ஆணைக்கிணங்க, இந்த புனித விமானத்தை, அங்கு ஆடுமாடு களை மேய்த்துக் கொண்டிருந்த இளம் பாலகனை கூப்பிட்டு,

‘‘கொள்ளாய் பால: அரங்கனைக் கொள்ளாய்
கொண்ட கடன் கழித்துக் கொண்டேக
ஒல்லாய் - வொப்பாய், என்றானாழ்வானாம்
தலைபத்தறுந்தான் தம்பியே’’

‘‘இந்த விமானத்தை சற்று கையில் வைத்திரு. நீராடி பின் ஏற்போம்’’ என்று விபீஷணன் அந்த ஆடுமாடு மேய்க்கும் சிறுவனிடம் தர, அவனோ அதனை காவிரியின் மணலில் வைத்துவிட்டு ஓடினான். விபீஷண ஆழ்வார், தனது பலம் முழுவதையும் பிரயோகித்து அந்த விமானத்தை எடுக்க முயன்றும் இயலவில்லை. மாறாக திருவரங்க விமானம் வ ளர்ந்து பெரிதாயிற்று. ராமபிரான் அரங்கனாக மாறி யோக நித்திரை செய்ய, தேவர்க்கும் மூவர்க்கும் கிட்டாத பொக்கிஷத்தை இந்த முட்டாள் சிறுவ னால் இழக்க நேர்ந்ததிற்கு சினமுற்று, பாலகனை துரத்தினான்.

‘‘அண்டத்தை ஆட்டவும் காக்கவும்
வல்லான், அரக்கன் துரத்திட
ஓடி நிற்பதைக் கண்டு வானோர்
பூமாரி பொழியக் கண்டோம்
ஓடிய பாலகன் உச்சி மலைஏறி யமற
அரக்கனுஞ் சினமேவி உச்சியில் குட்ட
சற்றே ரணமென நின்ற உச்சியுடை
கணேசரை சித்தரொடு ரிசியருமுப்பத்து
மூவாயிரந் தேவரும் ஆதிமூல சிவனுந்
தொழ, தாயுந்தந்தையுமான தாயுமானவனுந்
தொழ புண்ணியம் பெற்றதிப் புவியே’’

-என்றார் கொங்கணச் சித்தர். தன் சினம் தீர விபீஷணன் அவன் தலையில் ஒரு குட்டுவைக்க பாலகனாய் இருந்த இடையன் கணேசனாய் தோன்றி, திருவிளையாடல் நாதனின் பிள்ளை விநாயகரே இத் திருவிளையாடல் நடத்தினார். வானோர் தம் விருப்பத்தால் இங்ஙனம் செய்தார் என உணர்ந்து உச்சிப்பிள்ளையார் அப்பனை முதன்முதலில் தொழுது நின்றவர், பரிபூர்ண சரணாகதி தத்துவத்தை உலகிற்கு உணர்த்திய இலங்கை வேந்தன் விபீஷண ஆழ்வார். மலைக்கோட்டை கோயிலை அமைத்தவரும் அவரே என்கி றார்கள் சித்தர் பெருமக்கள்.

திருச்சி நகருக்கு திருவரங்கத்திற்கு, திரு ஆனைக்காவிற்கு வரும் பக்தர்களை அவர்கள் எண்ணாதிருக்கையிலேயே அருள்மாரி பொழிந்து கொண்டி ருக்கும் தட்சிண கயிலாய கபாலகன் புத்திரன் இந்த உச்சிப்பிள்ளையார் அப்பன். விபீஷண ஆழ்வார் மலையில் இருந்து இறங்கி, சற்றே அமர்ந்து தியானித்தார். அப்போது விநாயகரும் காவிரி மாதாவும் சேர்ந்து தோன்றி ஆசியீந்து, ‘‘அரங்கனைத் தொழு. அவன் அங்கிருந்தவாறு உன்னை அனுக்கிரகிப்பான்’’ என்றனர். அதுவே இன்றும் மாணிக்க விநாயகர் சந்நதியாய் அடிவாரத் தில் துலங்குகின்றது.

‘‘பொன்னியாறு தெய்வமொடு
கணநாதனும் தோன்றியே
யருளுறை செய்ய யொருவாறு
தேறி யரக்ககுல யிறையும்
அரங்கனை அண்ட கண்டோமே
யது மாணிக்கங்கட்டிய மணிவயிறே’’

-என்றான் போகன். மணிவயிறு என்பது விநாயகரை குறிக்கும். மாணிக்க விநாயகர் என கொள்க. மீண்டும் விபீஷண ஆழ்வார் திருவரங்கனை அண்டி பூஜித்தார். திருவரங்கத்தில் உறையும் அரங்கநாத சுவாமியையும் உச்சிப்பிள்ளையாரும் இப்பூவுல கில் முதன் முதலில் தொழுதவர் விபீஷணர். சாகும்வரை எந்தக் குறையும் இன்றி அரசாண்டவர் விபீஷணர். இறைவனுடன் இரண்டறக் கலந்தவர். இன்றும், அரங்கனை அனுதினம் ககன மார்க்கமாக வந்து தொழுது செல்வதாக நாடியில் சித்தர்கள் பேசுகின்றனர். உச்சிப்பிள்ளையாரைத் தொழுது பின், அரங்கநாதனைத் தொழுவது மிகுந்த சிறப்பைத் தரும் என்கின்றார், புலத்தியார்.

‘‘அரங்கனைத் தொழுவீர் -
சபரிவாரத்தே அண்ணவனைத்
தொழுவீர் தப்பாதே -
முன்னோர் ஏற்றிய சாபமும் தோஷப்பீடையு
முடன் மடியுமெய்யே.
குலத்திருக்கும் கடனுபாதையோடு
தாமதமான மணமும் தரித்திரமும் தவிடு
பொடியாகுமிது யறிவீர் மாந்தர்கள்
உச்சிப் பள்ளங்கண்டானையுங் கண்டேத்தி
யரங்கனை பின் சரணமடைய, முடியாத
தொன்றுண்டோ யிவ் வையத்து?’’

இந்த மண்ணுலகில் புராதனமானதும் ஆச்சரியம், அதிசயம் நிறைந்ததுமான பற்பல தலங்கள் இருப்பினும் தெய்வீக ரகசியங்கள் நிரம்பப் பெற்றதும் மிகவும் பழமை வாய்ந்ததும் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், தாயுமானவ அடிகள், மௌனகுரு சுவாமிகள் போன்ற அருளாளர் கள் தஞ்சம் புகுந்து நின்ற புண்ணியத் தலம் இது. படிப்பு வேண்டுமா? ஞாபக மறதிக்கு ஒரு தீராத மருந்து தேவையா? பணக்கஷ்டம் நிரந்தரமாக விலகணுமா? பிள்ளைகளுக்கு நல்ல தொழில் அமைய, அமைந்த தொழில் சிறப்படைய, திரவிய லாபம் பெற, நோயற்ற வாழ்வு வாழ, எதிரிகளின் சூது தன்னில் இருந்து தீர்வுகாண நாம் ஓடிச்செ ன்று அடைய வேண்டிய கோயில் இந்த உச்சிப்பிள்ளையார் கோயில்.

‘‘கல்வியுஞ் செல்வமுங் கூடுமே
பணி பெறுக்கங் காட்டுமே
பிணி வந்த வழி புகுந்தோடுமே
யுச்சி பிள்ளை தன்னை சரணஞ்
செய்வாருக்கே’’

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum