Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


சாமியே சரணம் ஐயப்பா...

Go down

சாமியே சரணம் ஐயப்பா... Empty சாமியே சரணம் ஐயப்பா...

Post by oviya Thu Dec 11, 2014 1:55 pm

கேரளா பந்தளம் பகுதியை ஆண்ட பக்திமானான ராஜசேகரன் என்ற மன்னருக்கு திருமணம் முடிந்து பல வருடங்கள் ஆன பின்னரும் குழந்தை பிறக்கவில்லை. இருவரும் கவலையில் இருந்து வந்தனர். இந்த சமயத்தில் மகிஷி என்ற அரக்கி தேவர்களையும், ரிஷிகளையும், பக்தர்களையும் துன்புறுத்தி வந்தாள். தேவர்களும், ரிஷிகளும் மகிஷியை அழிக்க விஷ்ணுவிடமும், சிவனிடமும் வேண்டினர். இந்த வேண்டுதலை ஏற்று விஷ்ணு மோகினியாக மாற அப்போது விஷ்ணுவுக்கும், சிவனுக்கும் பிறந்தவர் தான் ஐயப்பன்.

குழந்தையாக பிறந்த ஐயப்பனை நடுக்காட்டில் ஒரு மரத்துக்கு அடியில் இவர்கள் விட்டுச் சென்றனர். சிவ பக்தனான பந்தளம் மன்னர் வேட்டையாடுவதற்காக காட்டுக்கு வந்தார். அப்போது ஒரு மரத்தடியில் ஜொலிக்கும் தேஜசுடன் குழந்தை ஐயப்பனைக் கண்டார். குழந்தையில்லா குறையை போக்கவே ஆண்டவன் இந்த குழந்தையை தந்திருப்பதாக கருதி குழந்தையை எடுத்துச் சென்றார். தெய்வீக சக்தியுடன் காணப்பட்ட குழந்தையை கண்ட அரசியும் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தாள். கழுத்தில் மணியுடன் காணப்பட்டதால் அந்தக் குழந்தைக்கு ‘மணிகண்டன்‘ என பெயரிட்டு வளர்த்தனர்.

இந்த சமயத்தில் அரசிக்கு ஆண் குழந்தை பிறந்தது. கெட்ட எண்ணம் படைத்த சிலர் அரசியிடம் சென்று ‘ஐயப்பன் உங்களுக்கு பிறந்தவன் அல்ல. அவனை தலைப்பிள்ளை போல வளர்க்கின்றீர்கள். உங்களுக்கு பிறந்த மகன் இருக்க அடுத்த மன்னனாக அவன் வரவே வாய்ப்பிருக்கிறது. எனவே மணிகண்டனை உடனடியாக அரண்மனையில் இருந்து விரட்டி விடுங்கள்‘ என கூறி அவள் மனதில் நஞ்சை கலந்தனர். இதனால் மனம் மாறிய அரசி தனக்கு வயிற்று வலி ஏற்பட்டிருப்பதாகவும், புலிப்பால் குடித்தால் மட்டுமே தனது நோய் குணமாகும் என்று அரண்மனை வைத்தியரை வைத்து கூற வைத்தாள்.

இதையறிந்த ஐயப்பன் தான் யார் என்பதை காட்டுவதற்காக காட்டுக்கு சென்று புலிப்பால் கொண்டு வருவதாக கூறி சென்றான். அரசியும் அவன் இனி திரும்பி வரமாட்டான் என மகிழ்ச்சியடைந்தாள். காட்டுக்கு சென்று கொண்டிருந்த ஐயப்பனை அரக்கி மகிஷி தடுத்தாள். ஆவேசமடைந்த ஐயப்பன் தனது வில்லை எடுத்து மகிஷியை வதம் செய்தான். இதன் மூலம் ஐயப்பனின் அவதார மகிமை பூர்த்தியடைந்தது. தேவர்களும், ரிஷிகளும், பக்தர்களும் மகிழ்ச்சியடைந்தனர். இந்திரனே புலியாக மாற, மற்ற தேவர்கள் புலிகளாக புடை சூழ புலிமேல் ஏறி ஐயப்பன் நாட்டுக்கு சென்றான். தனது அவதார காரணம் பூர்த்தி பெற்றதால் தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாக கூறி 18 படிகளுக்கு மேல் தவக்கோலத்தில் அமர்ந்தான் ஐயப்பன்.

கேரளா பத்தினம்திட்டா மாவட்டத்தில் மேற்கு மலை தொடர்களில் சபரிமலை புண்ணிய தலம் அமைந்துள்ளது. மண்டல பூஜை நாட்கள், மகரவிளக்கு தரிசனம், சித்திரை விஷூ மற்றும் மலையாள மாதத்தின் 5 நாட்களில் மட்டுமே ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இந்தாண்டு மண்டல பூஜைகளுக்காக கடந்த 15ம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது. ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் கடுமையான விரதம் இருந்து செல்கின்றனர். விரதம் தொடங்கும் நாளில் துளசி மணி மாலை அணிந்து, தினமும் இருவேளை குளித்து சரண கோஷம் சொல்ல வேண்டும்.

விரத நாட்களில் அசைவ உணவுகள், மது, புகையிலை, தாம்பத்யத்தை தவிர்த்து ஐயப்பனை தியானிக்க வேண்டும். கருப்பு, நீல, காவி நிற உடையணிதலும் முகச்சவரம் செய்யாதிருத்தலும் அவசியம். இப்படி 41 நாட்கள் விரதம் அனுஷ்டித்து, குருசாமி உதவியுடன் இருமுடி கட்டி சபரிமலை புனித யாத்திரையை தொடங்க வேண்டும்.

பதினெட்டு படிகளின் தத்துவம்

காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.

குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.

லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும். ஆண்டவனை அடைய முடியாது.

மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.

மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.

டம்பம்: அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.

அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.

சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.

ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.

தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.

ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.

மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.

அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.

கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.

காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.

மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.

நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.

மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லதை பின்பற்றியும், தீயதை களைந்தும் வாழ்க்கைப் படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும்.

ஸ்ரீ ஐயப்ப மூலமந்திரம்

ஓம்! க்ரும் நம; பராய
கோப்த்ரே நம

கலியுகத்தில் எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும், ஆபத்துகளிலிருந்தும் மக்கள் அனைவரையும் ரட்சித்து காப்பாற்றும் சக்தியுடைய ஒரே கடவுள் ஐயப்பன்தான் என்பதே இந்த மூல மந்திரத்தின் பொருள்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum