Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


ஸ்ரீரங்கம் கோயிலில் தை தேரோட்டம் இன்று (12.02.2014) நடக்கிறது

Go down

ஸ்ரீரங்கம் கோயிலில் தை தேரோட்டம் இன்று (12.02.2014) நடக்கிறது Empty ஸ்ரீரங்கம் கோயிலில் தை தேரோட்டம் இன்று (12.02.2014) நடக்கிறது

Post by oviya on Thu Dec 11, 2014 2:41 pm

திருச்சி : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தை தேரோட்டம் இன்று நடக்கிறது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் தை தேரோட்ட திருவிழா 11 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 4ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அன்றைய தினம் முதல் நம்பெருமாள் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி திருஉள்வீதியாகிய நான்கு உத்திர வீதிகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

விழாவின் 8ம் நாளான நேற்று நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து பல்லக்கில் காலை 7 மணிக்கு புறப்பட்டு உள்திருவீதியாகிய நான்கு உத்திர வீதிகள் வலம் வந்து காலை 8.30 மணிக்கு ரங்கவிலாச மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். பின்னர், மாலை 6.30 மணிக்கு ரங்கா விலாச மண்டபத்திலிருந்து நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டு உள்திருவீதி வலம் வந்து ரங்கா, ரங்கா கோபுரம் அருகே வையாளி கண்டருளினார். அதன்பின், இரவு 8 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறை சேர்ந்தார். விழாவின் 9ம் நாளான இன்று (12ம் தேதி) காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் தை தேரில் எழுந்தருளி திருஉள்வீதிகளான நான்கு உத்திர வீதிகள் வலம் வருகிறார். விழா ஏற்பாடுகளை, கோயில் அறங்காவலர் குழு தலைவர் வேணுசீனிவாசன், கோயில் இணை ஆணையர் கல்யாணி, மேலாளர் விஜயன், அறங்காவலர்கள் ரங்காச்சாரி, டாக்டர் சீனிவாசன், கஸ்தூரி, சுழல்முறை அறங்காவலர் வெங்கடேஷ் உத்தமநம்பி, மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்துள்ளனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum