Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


சர்வேஸ்வரனையே பிடித்த சனீஸ்வரன்!

Go down

சர்வேஸ்வரனையே பிடித்த சனீஸ்வரன்! Empty சர்வேஸ்வரனையே பிடித்த சனீஸ்வரன்!

Post by oviya Thu Dec 11, 2014 2:59 pm

கும்பகோணம்

பிரளய காலத்தில் நீரில் மூழ்காமல் காட்சி தந்தத் திருத்தலம், சூரிய கிரகணத்தின்போது நாகம் பூஜித்த திருத்தலம் என்று போற்றப்படுகிறது, தேப்பெருமாநல்லூர். ‘அடுத்த பிறவி இல்லாதோருக்குதான் இத்தல இறைவனை வழிபடும் பாக்கியம் கிட்டும்’ என்கிறது தலவரலாறு. புராணத் தொடர்புடைய இத்தலத்தில் வேதாந்த நாயகி சமேத காசி விஸ்வநாதர் அருள்புரிகிறார். மிகவும் பழமையான இத்திருக்கோயிலில் எழுந்த ருளியிருக்கும் தெய்வங்கள் வித்தியாசக் கோலம் காட்டுகிறார்கள்.

கிழக்கு நோக்கி அருள்புரியும் காசி விஸ்வநாதரை தினமும் சூரியன் தன் ஒளிக்கதிர் களால் காலை உதயத்தின்போது வழிபடுகிறான். அதற்கேற்ப இக்கோயிலின் பிரதான வாயில் கதவுகள், கம்பிகளால் அமைக்கப்பட்டிருக்கிறது. சூரியன் வழிபட்ட பின்புதான் இக்கோயில் கதவுகள், காலை ஏழு மணிக்கு மேல் திறக்கப்படுகின்றன. பக்தர்களுக்கு, சுவாமியை தரிசித்ததும் வில்வத்தளத்துடன், ஒரு ருத்ராட்சத்தையும் பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். மகாமண்டபத்திற்குள் தெற்கு திசை நோக்கி தனிச் சந்நதியில் அன்னை வேதாந்த நாயகி அருள்புரிகிறாள்.

இந்த அம்பாள் வலது காலை எடுத்து வைத்து முன்நோக்கி வருவது போன்ற தோற்றத்தில் காட்சி தருகிறாள். அம்பாள் நம்முடன் பேசுவதுபோல் உதடுகள் குவிந்த நிலையில் உள்ளன. இது வேறு எங்கும் காணக்கிடைக்காத காட்சி. நமக்கு வேதத்தின் உட்பொருளை உபதேசிக்கும் பாவனை இது என்றும் கூறுகிறார்கள். அம்பாளுக்கு வெள்ளிக்கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும். தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அம்பாள் சந்நதிக்கு அருகில் சாந்த பைரவர் என்று சிறிய உருவிலும், மகா பைரவர் என்று ஐந்தடி உயரத்தில் பெரிய திருவுருவிலும் ஒரே சந்நதியில் இரண்டு பைரவர்கள் அருள்புரிகிறார்கள். சந்நதிக்கு பக்கத்தில் சனிபகவான், காக்கை வாகனத்துடன், இடுப்புக் கீழே இடக்கையை வைத்தபடி ஒய்யாரமாக மேற்கு திசை நோக்கி இறைவனைப் பார்த்தபடி காட்சி தருகிறார். சனி பகவான், இறைவனைப் பிடிப்பதற்கு நேரம் நெருங்கி விட்டதால், அம்பாளிடம் ‘நாளை காலை ஏழேகால் நாழிகைப் பொழுது ஈசனைப் பிடிக்கப் போகிறேன்’ என்று அறிவித்தார்.

இதைக் கேட்டு கோபம் கொண்ட அம்பாள், அவ்வாறு அவன் செய்யக் கூடாது என்று எச்சரித்தாள். ஆனால், ஈஸ்வரனை ஏழேகால் நாழிகைப் பிடித்து தன் கடமையை ஒழுங்காக நிறைவேற்றினார் சனி. அதைக் கண்டு அம்பாள் திகைத்தபோது, ‘‘நான் வந்த வேலை வெற்றியுடன் முடிந்தது. ஈஸ்வரன் அரச மரத்தின் பின்புறம் ஒளிந்திருக்க நேர்ந்ததல்லவா? அந்த நேரம்தான் நான் அவரைப் பிடித்த நேரம்’’ என்று ஆணவத்துடன் சொன்னதுடன், சற்று ஒய்யாரமாக இடுப்பில் கை வைத்தபடி அம்பாள் முன் நின்றார்.

அந்தக் கோலம்தான் இது. சனி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரன், அரசமரத்தின் பின்புறத்திலிருந்து கோப த்துடன் வெளிப்பட்டு மகாமந்திர பைரவர் அவதாரம் எடுத்து சனிபகவானை இரண்டாகக் கிழித்தார். உடனே, சனிபகவான் சிவபெருமானை நோக்கி, ‘‘ஈஸ்வரா தாங்கள் வகுந்த சட்டப்படிதான் நான் இயங்குகிறேன். நான் இல்லையேல் பூலோகவாசிகள் தத்தமது விருப்பப்படி ஆணவத்துடன் செயல்படுவர். எனவே, தங்களிடம் ஆணவத்துடன் நான் நடந்து கொண்டதற்கு என்னை மன்னித்து, மீண்டும் முன்போல் செயல்பட அருள்புரிய வேண்டும்’’ என்று வேண்டினார்.

சனிபகவான் சொல்வதில் நியாயம் இருப்பதால், சிவபெருமான், இருகூறான சனியின் உடலை ஒன்று சேர்த்து அருள் புரிந்தார். இந்த சனிபகவானை வணங்கினால், சனியின் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். மகாமந்திர பைரவராக உக்கிரமாகக் காட்சி தந்த ஈஸ்வரனுக்கு நான்கு வேதங்களைச் சொல்லி அவர் கோபத்தைத் தணித்தாள் அம்பிகை. அம்பிகையின் அருட்பார்வையில் கோபம் தணிந்து மீண்டும் சாந்த சொரூபியானார் ஈஸ்வரன். இதனால், அம்பாள், வேதாந்த நாயகி என்று பெயர் பெற்றாள்.

அந்த வேளையில் நாரதர் அங்கு வந்தார். ‘‘ஈஸ்வரா, நீங்கள் சனிபகவானை இரண்டாகக் கிழித்த பாவம் உங்களைப் பிடித்துக் கொண் டது. இனிமேல் நீங்கள் விஸ்வரூபம் எடுக்க இயலாது. எனவே, நீங்கள் பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களை ஒரு சேர தரிசித்தால் அந்தப் பாவம் நீங்கும்’’ என்றார். உடனே, ஈஸ்வரன் பன்னிரண்டு ஜோதிர்லிங்க பரமேஸ்வரர்களையும் இத்தலத்திற்கு வரவழைத்தார். பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களும் தரிசனம் கொடுத்த புண்ணியத் திருத்தலம் என்பதால், ஏழேழு ஜன்மங்களில் புண்ணியம் செய்தவர்களும், மறுபிறவி இல்லாதவர்களும்தான் இங்கு வந்து தரிசிக்க முடியும் என்று நாரதர் சொன்னார்.

அதில் ஒரு ஜோதிர்லிங்கமான காசி விஸ்வநாதர், விசாலாட்சியுடன் இங்கேயே தங்கிவிட்டார். அந்தச் சந்நதி மகாமண்டபத்தின் தென்கிழக்கு மூலையில் உள்ளது. ஆலயத்தின் தென் பகுதியில் பெரிய திருவுருவில் அன்னதான தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார். இவர், சீடர்கள் யாருமின்றி காளை வாகனத்தில் அமர்ந்து நிருதி திசையைப் பார்த்த வண்ணம் அருள்புரிகிறார். இவருக்கு தினமும் பழைய சோறு (முதல் நாள் தண்ணீர் ஊற்றி வைத்த அன் னம்) படைக்கப்படுகிறது. இவரை மனதார வழிபட்டால் அன்னப் பஞ்சமே வராது என்கிறார்கள்.

இக்கோயிலில் ஒரே சந்நதியில் இரண்டு சண்டிகேஸ்வரர்கள் அருள்புரிகிறார்கள். ஒருவர் பெரிய தோற்றத்தில் தெற்கு திசை நோக்கியும், இன்னொருவர் சிறிய உருவில் கிழக்கு திசை நோக்கியும் உள்ளார்கள். கோஷ்டத்தில் நான்கு கரங்கள் கொண்ட விஷ்ணு துர்க்கையும், அம்பாள் சந்நதியில் வடக்குக் கோஷ்டத்தில் எட்டு கரங்கள் கொண்ட சிவ துர்க்கையும் காட்சி தருகிறார்கள். இரு துர்க்கைகளும் திரிபங்க நிலையில் நின்று வடமேற்கு திசையை நோக்கி காட்சி தருகிறார்கள். கன்னி மூலையில் கபால விநாயகருக்கு தனிச் சந்நதி உள்ளது. இவரை வழிபட சகல பாவங்களும் நீங்கி எடுத்த காரியம் வெற்றியடையும்.

கோயிலின் கர்ப்பகிரகம் மட்டும் தேன் கலந்த சுண்ணாம்பால் கட்டப்பட்டதாம். தலமரம் வில்வம். தலத் தீர்த்தமான பிரம்ம தீர்த்தம் கோயிலின் கிழக்குப் பகுதியில் உள்ளது. தலத்தின் புராணப் பெயர் தேவராஜபுரம் என்பதாகும். சூரிய கிரகணத்தின்போது, ஒரு பெரிய நாகம் எங்கிருந்தோ வந்து, தலமரமான வில்வமரத்தில் ஏறி வில்வத்தளத்தைப் பறித்து வாயில் கவ்விக் கொண்டு, கிழக்கு வாசல் வழியாக நுழைந்து, சிவலிங்கத்தின் மீது ஏறி வில்வத்தளத்தை வைத்தபின் கீழே இறங்கி படம் எடுத்தபின், கோமுகி வழியாக சென்று மறைந்து விடுமாம்! இத்தலம் கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum