Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


ஏரிக்குப்பம் சனீஸ்வரன் கோயில் சனிப் பெயர்ச்சி விழா 16ம் தேதி நடக்கிறது

Go down

ஏரிக்குப்பம் சனீஸ்வரன் கோயில் சனிப் பெயர்ச்சி விழா 16ம் தேதி நடக்கிறது Empty ஏரிக்குப்பம் சனீஸ்வரன் கோயில் சனிப் பெயர்ச்சி விழா 16ம் தேதி நடக்கிறது

Post by oviya Sun Nov 30, 2014 1:52 pm

கண்ணமங்கலம் அருகே உள்ள ஏரிக்குப்பம் கிராமத்தில் கி.பி15ம் நூற்றாண்டை சேர்ந்த பழமை வாய்ந்த அருள்மிகு யந்திர சனீஸ்வரர் கோவிலில் வருகிற 16ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது.

துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு சனிப் பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு இக்கோவிலில் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விக்னேஷ்வரபூஜை, கணபதி, பூர்ணாஹிதி, மகா தீபாராதனையும், தீர்த்தம், பிரசாதம் வழங்கப்படுகிறது.

பின்னர் 15ம் தேதி திங்கட்கிழமை காலை 8.30 மணி அளவில் நவக்கிரக ஹோமம், பூரணஹிதியும், 16ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8 மணி அளவில் சனீஸ்வர பரிகார பூஜை, தோஷ நிவர்த்தி பூஜை, விசேஷ ஹோமங்கள்நடக்கிறது. 1030 மணியளவில் சாமிக்கு கலாபிஷேக சஸ்கரம், சிறப்பு அலங்காரத்துடன் பிற்பகல் 2.45 மணி அளவில் சனிப்பெயர்ச்சி மகாஆராதனையுடன் பிரசாதம் வழங்கப்படும்.

மேலும் சனிப்பெயர்ச்சி அன்று பிற்பகல் 12 மணி முதல் இரவு வரை நடைபெறும். பூஜைகளில் ரூ.250 கட்டணம் செலுத்தி பக்தர்கள் கலந்து கொள்ளலாம். 20.12.2014 சனிக்கிழமை அன்று நடைபெறும்.

இந்த சனிப்பெயர்ச்சி காரணமாக மேஷம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, குடும்ப ராசிக்காக பூஜையில் கலந்து கொண்டு பரிகாரம் செய்து கொள்ளலாம்.

இந்த சனிப் பெயர்ச்சி விழாவுக்கு வருகை தரும் பக்தர்களின வசதிகளை ஆரணி, வேலூர், போளூர், திருவண்ணாமலை ஆகிய ஊர்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகளும், குடிநீர் சுகாதார வசதிகளும் செய்து தரப்பட உள்ளது இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கார்த்திகேயன் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் 16ம் தேதி நடை திறப்பு
» புதூர் பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிசேக விழா 12–ந் தேதி நடக்கிறது
» குரு பெயர்ச்சி ஆலங்குடியில் இன்று விழா
» திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளத்தில் ராகு - கேது பெயர்ச்சி விழா பரிகார ராசியினர் திரண்டனர்
» மேலமாங்குழி ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் 6–ந் தேதி நடக்கிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum