Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு

Go down

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு Empty ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு

Post by oviya Wed Dec 10, 2014 1:14 pm

திருவனந்தபுரம்: ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. 21ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாத பூஜைகளை முன்னிட்டு இன்று (16ஆம்தேதி) மாலை 5.30 மணி அளவில் தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல் சாந்தி தாமோதரன் போற்றி கோயில் நடை திறந்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்துவார். இதன் பின்னர் 6.30 மணி அளவில் கண்டரரு ராஜீவரரு தலைமையில் சகஸ்ரகலசபூஜை நடைபெறும். மறுநாள் ஆடிமாத 1ம் தேதியான (17ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும்.

அன்று முதல் 21ம் தேதி வரை களபாபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை ஆகிய சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த 5 நாட்களிலும் அதிகாலை 5.30 மணி முதல் காலை 11.30 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெறும். 21ம் தேதியுடன் ஆடி மாத பூஜைகள் நிறைவடையும். அன்று இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். ஆடி மாத பூஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள் என்பதால் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் திருவிதாங்கூர் தேவசம் போர்ட்டு செய்துள்ளது. 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை சபரிமலை சன்னிதானத்தில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் அன்னதானம் நடத்தப்படுகிறது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum