Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


திகைக்க வைக்கும் திருப்பதி தகவல்கள்!

Go down

திகைக்க வைக்கும் திருப்பதி தகவல்கள்! Empty திகைக்க வைக்கும் திருப்பதி தகவல்கள்!

Post by oviya Wed Dec 10, 2014 1:28 pm

திருப்பதி ஏழுமலையான் கோயிலில்தான் எத்தனை எத்தனை ரகசியங்கள்!

* திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் ‘சிலாதாரணம்’ என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்தப் பாறைகள் இங்கு மட்டும்தான் உள்ளன. இந்தப் பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும் இந்தப் பாறையிலிருந்து உருவாக்கப்பட்டதுதான்.

* ஏழுமலையான் திருவுருவச் சிலைக்கு பச்சைக் கற்பூரம் சாத்துகிறார்கள். இது ஒருவகை ரசாயனப் பொருள். அரிப்பைக் கொடுக்கக் கூடியது. இதை ஒரு கருங்கல் மீது தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சில சாதாரணப் பாறைகளில் தடவினால் அவை வெடிப்பதில்லை. அதனால்தான் ஏழுமலையான் திருவுருவச் சிலைக்கு 365 நாளும் பச்சைக் கற்பூரம் தடவினாலும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

* எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஓர் இடத்தில் சிற்பியின் உளிப்பட்ட தடம் அதன் விளிம்புகளிலாவது தெரியும். உலோகச் சிலையானாலும் அதனை உருக்கி வார்த்த தடம் தெரியும். ஆனால், ஏழுமலையான் திருவுருவச் சிலையில் அப்படி எந்த அடையாளமும் தெரியவில்லை. எந்தக் கருங்கல் சிலையும் பொதுவாக சொரசொரப்பாக இருக்கும். ஆனால், ஏழுமலையான் திருமேனியில் நிறைய நுணுக்கமான வேலைப்பாடுகள் இருந்தாலும் நெற்றிச்சுட்டி, காதணிகள், நாகாபரணங்கள் எல்லாம் செதுக்கினாற்போலவே தோன்றாது; மாறாக புதிதாக செய்து போடப்பட்ட நகைகள் போலவே மெருகு மங்காமல், பளபளப்பாக இருக்கின்றன.

* ஏழுமலையான் திருவுருவச் சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் கொண்டதாக இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாலை 4:30 மணிக்கு குளிர்ந்த நீர், பால், திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன், வெப்பம் காரணமாக ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும்போது, அவை கொதிக்கும் சூட்டில் இருப்பதை பட்டர்கள் உணர்கிறார்கள்.

* திருப்பதி திருக்கோயில் மடப்பள்ளி (சமையலறை) மிகவும் பெரியது. பொங்கல், தயிர்சாதம், புளியோதரை, சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மௌகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம் கேசரி, முந்திரி பருப்பு கேசரி போன்றவை தினமும் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன.

* திருமலையானுக்கு தினமும் ஒரு மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் இட்டு இதை மட்டுமே நிவேதிக்கிறார்கள். இது தவிர மேலே குறிப்பிட்ட எந்த பிரசாதமும் கர்ப்பகிரகத்திலுள்ள குலசேகரப்படியைத் தாண்டிச் செல்லாது. பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும் தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

* ஏழுமலையான் அணியும் புடவை, 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட பட்டுப் பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. ஆனால், இதனை சாத்துவதாக ஒரு பக்தர் வேண்டிக் கொள்ளலாம். அவர், திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12,500 ரூபாய் செலுத்த வேண்டும். வாரத்தில் ஒருமுறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும்தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு இப்படி வஸ்திரம் சாத்தப்படுவதைக் காண்பதற்கு அந்த பக்தர் மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

* உள் சாத்து வஸ்திரம் சாத்த இருபதாயிரம் ரூபாய் கட்டணம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு இந்த உள் சாத்து வஸ்திரம் சாத்துவதைக் காண பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும். அத்தனை டிமாண்டு இந்த பிரார்த்தனைக்கு!

* பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்ப்பிக்கும் சீர் வஸ்திரங்களும் ஆண்டுக்கு இரண்டுமுறை சாத்தப்படுகிறது.

* அதேபோல ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்!

* அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரீஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு, 51 வட்டில் பாலும் சேர்த்து கரைத்து அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும். காலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

* ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்
படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80 ரூபாய்.

* சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்கு அனுப்பப்படுகின்றன.

* ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி என்கிறார்கள். இவருடைய நகைகளை வைத்துக்கொள்ள இடமும் இல்லை; மொத்தமாக சாத்தி அழகு பார்க்க நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒருமுறை உபரியாக உள்ள நகைகளை செய்தித் தாள்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

* ஏழுமலையானின் சாளக்கிராம தங்க மாலை 12 கிலோ எடை கொண்டது. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோயிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் இங்கு மட்டும்தான் இருக்கிறது; வேறெங்கும் இல்லை. இதன் மதிப்பு ரூ.100 கோடி.

* மாமன்னர்களான ராஜேந்திர சோழர், கிருஷ்ணதேவராயர், அச்சுதராயர் போன்றோர், ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும் அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்ப்பித்து இருக்கிறார்.

* ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப் போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி. 966 ஜூன் 8ம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்கிரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத் தந்து, பூஜைகளைச் செய்ய ஒரு அறக்கட்டளையையும் அமைத்தார். முதலாம் குலோத்துங்கச் சோழன் திருமலை தேடிவந்து காணிக்கை செலுத்தி உள்ளார்.

* திருப்பதியில் உள்ள ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

* வெள்ளிக்கிழமைகள் மற்றும் மார்கழி மாத அர்ச்சனைகளில் வில்வ இலை உபயோகப்படுத்தப்படுகிறது.

* சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப் பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெறுகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மாவாகவும் சிவாம்சம் பொருந்தி ஈஸ்வரனாகவும் சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதி வைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதி கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்து சாமி தீட்க்ஷிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமலையான் மீது சேஷசல நாமம் பாடலை வராளி ராகத்தில் பாடியுள்ளார்.

* அபிஷேகத்தின்போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

* ஏழுமலையான் கோயிலின் தல விருட்சம் புளிய மரம்.

* எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருச்சிலையிலும்கூட கையில் ஏதாவது ஒரு ஆயுதம் இருக்கும். ஆனால், ஏழுமலையான் கரத்தில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழிலக்கியத்தில் நம் முன்னோர்களால் ‘வெறுங்கை வேடன்’ என்று போற்றப்பட்டார்.

* 1781ம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப் படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33வது பிரிவைச் சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். தான் குணமடைய ஏழுமலையானை பிரார்த்தனை செய்தார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக் கடன் செலுத்தினார்.

* பிரிட்டிஷார்களான சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றோர் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர். ஆனாலும் திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. அதன் பிறகு கிறிஸ்தவப் பாதிரியார்கள் சிலர் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால், அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள், அந்தக் கோயிலின் நடைமுறைப்படி நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வருமோ என்றும் கவலைப்பட்டார்கள்!

* திருப்பதி அலர்மேல்மங்கைத் தாயாருக்கு அணிவிக்கப்படும், பருத்தியால் ஆன உள்பாவாடை, கத்வால் என்ற ஊரில் தயார் செய்யப்படுகிறது. செங்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். இப்படித் தயாரிக்கும்போது அவர்கள் மூன்று வேளை குளிப்பார்கள்; மது, மாமிசம் உண்ண மாட்டார்கள்.

* வெள்ளிக்கிழமை அபிஷேகத்திற்காக பரிமள அறையில், முந்தின நாள் இரவில் வாசனை திரவியங்கள் அறைத்து தயார் செய்யப்படுகின்றன. குங்குமப்பூ கலவையும் இதில் உண்டு. இவ்வாறு ஒரு வாரத்துக்குப் பயன்படுத்துவதற்காக வெளிநாடுகளிலிருந்து பக்தர்கள் அனுப்பும் வாசனை திரவியங்களின் மதிப்பு ரூ. 50,000 ஆகும்.

* ஏழுமலையானை வாரத்தில் 4 நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்ணுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் பாவித்து பூஜை செய்கிறார்கள்.

* ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்றபடியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விட வேண்டும் என்பது இந்த புஷ்கரணியின் நீராடல் சம்பிரதாயமாகும்.

* வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்துமுறை நடக்கும். வடகலை சம்பிரதாயமாக ‘வேங்கடமெனப் பெற்ற’ என்ற பாசுரமும் தனியன்களும் பாடப்பெறும். சாத்துமுறையின்போது பூ, வஸ்திரம் ஏதுமில்லாமல் ஏழுமலையான் காணப்படுவார். முதலில் ஒரு தீபாராதனை காண்பிக்கப்படும். பிறகு தென்கலை சாத்துமுறை சாதிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். இதன் பிறகும் ஒரு தீபாராதனை. ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

* கி.பி. 1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர், பத்மாவதி தாயாருக்கு கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தௌலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் கோயில் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

* திருமலை திருக்கோயிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இவற்றில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி. 830 தொடங்கி 1909வரையிலான கல்வெட்டுக்களில் 50தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்களும் தமிழிலேயே உள்ளன.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum