Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

Go down

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம் Empty திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

Post by oviya Thu Dec 11, 2014 1:55 pm

திருப்பதி: திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இரவு சிறிய சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் மாட வீதியுலா வருகிறார். 30ம் தேதி காலை பெரிய சேஷ வாகனத்திலும், இரவு அன்ன வாகனத்திலும், டிச.1ம் தேதி காலை முத்துப்பந்தல் வாகனத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும், 2ம் தேதி கல்ப விருட்ச வாகனத்திலும், இரவு அனுமந்த வாகனத்திலும், 3ம் தேதி காலை பல்லக்கு உற்சவமும், மாலை வசந்த உற்சவமும், இரவு பத்மாவதி தாயாருக்கு முக்கியமான சிறப்பு கஜ வாகன சேவையும் நடைபெற உள்ளது.

4ம் தேதி காலை சர்வ பூபால வாகனத்திலும், மாலை தங்க தேரோட்டமும், இரவு கருட சேவையும் நடைபெற உள்ளது. 5ம் தேதி காலை சூரிய பிரபை, இரவு சந்திர பிரபையும், 6ம் தேதி மகா தேரோட்டமும், இரவு அஸ்வ வாகனத்திலும் அருள்பாலிக்க உள்ளார். 7ம் தேதி காலை பல்லக்கில் பத்மாவதி தாயார், உற்சவமூர்த்திகள் மற்றும் சக்கரத்தாழ்வார் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். இதைத்தொடர்ந்து தீர்த்தவாரி நடைபெறும். அன்று மாலை கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று காலை பத்மாவதி தாயாருக்கு 1 லட்ச குங்கும அர்ச்சனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் அங்குரார்ப்பணம் நடந்தது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவம் 18–ந்தேதி தொடங்குகிறது
» திருச்சானூர் பிரம்மோற்சவம் : 5வது நாள் கஜ வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்
» திருச்சானூர் கோவில் பிரமோற்சவம்: தங்க ரதத்தில் பத்மாவதி தாயார் பவனி
» திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரமோற்சவம் நாளை தொடங்குகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum