மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 16-ந்தேதி திறப்பு
Page 1 of 1

திருவிதாங்கூர் தேவசம் போர்டு கமிஷனர் பி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல பூஜையை முன்னிட்டு இம்மாதம் (நவம்பர்) 16-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 41 நாள் சிறப்பு பூஜைக்கு பின், டிசம்பர் 27-ந்தேதி மண்டல பூஜை விமரிசையாக நடைபெறும். அன்று இரவு கோவில் நடை அடைக்கப்படும். பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் மீண்டும் திறக்கப்படும்.
அடுத்த ஆண்டு (2015) ஜனவரி 14-ந்தேதி மகர விளக்கு சிறப்பு பூஜை நடைபெறும். மகரவிளக்கு பூஜைக்கு பின் சபரிமலை கோவில் நடை, ஜனவரி மாதம் 20-ந்தேதி பந்தளம் கொட்டாரம் ராஜபிரதிநிதியின் சாமி தரிசனத்திற்கு பின் அடைக்கப்படும்.
மேலும் அடுத்த ஆண்டு (2015) மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்படும் தேதி விவரம் வருமாறு:-
மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை, 2015 பிப்ரவரி மாதம் 12-ந் தேதி மாலை திறக்கப்படும். 5 நாள் சிறப்பு பூஜைக்கு பின் 17-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். பங்குனி மாத பூஜைக்காக 2015 மார்ச் 14-ந் தேதி நடை திறக்கப்பட்டு, 19-ந்தேதி வரை பூஜைகள் நடைபெறும்.
சபரிமலை அய்யப்பன் கோவில் ஆண்டு திருவிழாவுக்காக, மார்ச் 24-ந்தேதி மாலை நடை திறக்கப்படும். 25-ந்தேதி காலை கோவிலில் திருவிழா கொடி ஏற்றப்படும் அன்று முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை விழா நடைபெறும். 3-ந்தேதி பம்பை நதியில் அய்யப்பனுக்கு ஆராட்டும் நடைபெறும்.
சித்திரை மாத பூஜைக்காக ஏப்ரல் 10-ந்தேதி நடை திறக்கப்பட்டு, 19-ந்தேதி வரை பூஜைகள் நடைபெறும். விஷூ பண்டிகை ஏப்ரல் 15-ந்தேதி சபரிமலையில் கொண்டாடப்படும். வைகாசி மாத பூஜைக்காக 2015 மே 14-ந்தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படும். 5 நாள் பூஜைக்கு பின் 19-ந்தேதி இரவு நடை அடைக்கப்படும். பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு மே 28-ந்தேதி கோவில் நடை திறக்கப்படும். 29-ந்தேதி பிரதிஷ்டை வழிபாடு நடைபெறும்.
ஆனி மாத பூஜைக்காக ஜூன் 15-ந்தேதி சபரிமலை நடை திறக்கப்படும். 5 நாள் சிறப்பு பூஜைக்கு பின் ஜூன் 20-ந்தேதி இரவு நடை அடைக்கப்படும். ஆடி மாத பூஜைக்காக ஜூலை மாதம் 16-ந்தேதி மாலையில் நடை திறக்கப்பட்டு, 21-ந் தேதி அடைக்கப்படும். ஆவணி மாத பூஜைக்காக ஆகஸ்டு 16-ந்தேதி கோவில் திறக்கப்பட்டு, 21-ந் தேதி நடை அடைக்கப்படும்.
சிறப்பு வாய்ந்த ஓணம் பண்டிகையை முன்னிட்டு, ஆகஸ்டு 26-ந்தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டு 30-ந்தேதி வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். புரட்டாசி மாத பூஜைக்காக செப்டம்பர் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டு, 21-ந்தேதி அடைக்கப்படும். ஐப்பசி மாத பூஜைக்காக அக்டோபர் மாதம் 17-ந்தேதி மாலையில் நடை திறக்கப்படும். தொடர்ந்து 5 நாள் நடைபெறும் சிறப்பு பூஜைக்கு பின் அக்டோபர் 22-ந்தேதி கோவில் நடை அடைக்கப்படும். ஸ்ரீசித்திரை ஆட்ட திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 9-ந்தேதி கோவில் நடை திறக்கப்படும். 10-ந்தேதி சிறப்பு பூஜை நடைபெறும்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» மண்டல பூஜைக்காக சபரிமலை கோவிலில் 16–ந்தேதி நடை திறப்பு
» மண்டல, மகர விளக்கு பூஜை நிறைவு : சபரிமலை கோயில் நடை சாத்தப்பட்டது
» திருவிடைமருதூர் மீனாட்சி–சொக்கநாதர் கோவில் கும்பாபிஷேகம் 30–ந்தேதி நடக்கிறது
» ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் 16ம் தேதி நடை திறப்பு
» சித்திரை ஆட்டத்திருநாள் : சபரிமலை கோயிலில் 11ம் தேதி நடை திறப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya