Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


தகுதியற்ற நியமனங்களை வழங்கி பலவீனமான தமிழ்சமுகத்தை உருவாக்க அரசாங்கம் முயற்சி

Go down

தகுதியற்ற நியமனங்களை வழங்கி பலவீனமான தமிழ்சமுகத்தை உருவாக்க அரசாங்கம் முயற்சி Empty தகுதியற்ற நியமனங்களை வழங்கி பலவீனமான தமிழ்சமுகத்தை உருவாக்க அரசாங்கம் முயற்சி

Post by oviya Sat Dec 06, 2014 11:42 am

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பொதுநூலகத்தால் தேசிய வாசிப்புமாத நிகழ்வுகள் நேற்று நடத்தப்பட்டுள்ளன.
கரைச்சி பிரதேசபையின் தவிசாளர் நாவை.குகராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக பா.உறுப்பினர் சி.சிறீதரன்,சிறப்பு விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் பசுபதி அரியரத்தினம் கௌரவ விருந்தினர்களாக ஸ்கந்தபுரம் இல.1 பாடசாலை முதல்வர் திருமதி.வ.விமலேஸ்வரன் ஸ்கந்தபுரம் இல.2 பாடசாலை முதல்வர் திருமதி.ச.ரவிச்சந்திரன் கிளிநொச்சி மக்கள் அமைப்பு கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் சுரேஸ்குமார் கரைச்சி பிரதேசபை உறுப்பினர்களான தயாபரன் சுப்பையா, துணுக்காய் பிரதேசசசபை தலைவர் அக்கராயன் மகா வித்தியாலய அதிபர் மதுரநாயகம், கரைச்சி பிரதேச செயலர் கிருஸ்ணகுமார், அக்கராயன் பிரதேச தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சிறி மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் அமைப்பாளர் கரன் உட்பட வாசகர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் தேசிய வாசிப்பு மாத போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கு மதிப்பளிக்கப்பட்டு பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண சபை உறுப்பினர் பசுபதி அரியரத்தினம் உரையாற்றும்போது, வாசிப்பதால் மனிதனுக்கு ஏற்படும் பூரணத்துவம் பற்றி பல்வேறு அறிஞர்கள் பதிவு செய்திருக்கின்றார்கள்.

மனித வாழ்வியலில் வாசிப்பு மூலம்தான் ஆரம்பத்தில் பல்வேறு வளர்ச்சிகள் ஏற்பட்டிருக்கின்றன.இன்று ஊடகங்களில் வளர்ச்சிப்போக்கு உச்ச நிலையை தொட்டுள்ளபோதும் எமது சமூகத்தில் வாசிப்பு பழக்கம் அருகிவந்துள்ளதை நாம் உணரமுடிகின்றது.

ஆயினும் இத்தகைய கிராமங்களுக்குள் இருக்கும் வாசிக சாலைகள் கொஞ்சமேனும் வாசிப்புடன் கூடிய சமுகத்தை உருவாக்க பயன்படுவது மகிழ்ச்சிக்குரியது.

பொழுதுபோக்கு சாதனங்களின் பெருக்கம் சமூகச்சீரழிவுகளுக்கு அதிகம் வித்திட்டு செல்கின்றது.தற்பொழுது எங்கள் தமிழ் சமுதாயமும் அந்த அநாகரிகத்துள் சிக்குண்டிருப்பதை நாளாந்தம் நாம் பார்க்கும் செய்திகள் ஊடாக அறிகின்றோம்.

இன்றைய எமது நிலை திட்டமிட்டு ஆக்கிரமிப்பாளர்களால் கட்டியெழுப்பப்படுகின்றது.சமூகத்தை சீரழிக்கும் சகல விதமான விடயங்களும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.இதன் மூலம் அறிவுச்சமுதாயம் என வரலாற்றை கொண்ட எமது இனத்தை முட்டாள்கள் ஆக்கிவிட்டால் தாம் நினைத்ததை சாதிக்கமுடியும் என நம்புகின்றார்கள்.

இன்று அரசியல் நோக்கங்களுடன் தகுதியற்ற நியமனங்கள் வேலைவாய்ப்பு என்ற பெயரில் வழங்கப்படுகின்றன.இது பல்வேறு நிறுவனங்கள், திணைக்களங்களிலும் அரங்கேற்றப்படுகின்றது.

இப்படியான தகுயற்ற நியமனங்களை வழங்கி ஆளுமையற்ற நிர்வாக செயற்பாடுகளை உருவாக்கி எமது சமுகத்தை சீரழிக்க அரசாங்கம் முனைகின்றது அதற்கு அரசாங்கத்தோடு சேர்ந்தியங்கும் குறிப்பிட்ட தமிழர் கூட்டமும் துணைபோகின்றது.

எனவே எமது சமூகத்தில் விழிப்புணர்வு அவசியம்.அரசாங்கம் தருவதாக சொல்லப்படுகின்ற பல விடயங்களில் எமது சமுதாயத்தை அழிக்கும் ஆயுதம் உண்டு என்பதையும் நாம் ஒவ்வொருவரும் உணரவேண்டும்.அதற்கு பரந்த வாசிப்புப்பழக்கமும் அவசியம் என தெரிவித்தார்.











oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைப்பு
» அழகான தேசத்தை உருவாக்க சுயமுயற்சி அவசியம்: பா.உ.சிறீதரன்
» ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைக்கு அடிபணிந்தது அரசாங்கம்
» இன­வாத பிர­சா­ரத்தின் மூலம் அர­சியல் இலாபம் தேடும் முயற்சி
» ஒரே நாளில் 25 கோடி ரூபா இலங்கைக்குள் பரிமாற்றம்! அதிர்ச்சியில் அரசாங்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum