Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


சர்வ பூபால வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி

Go down

சர்வ பூபால வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி Empty சர்வ பூபால வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி

Post by oviya Thu Dec 11, 2014 2:06 pm

திருப்பதி: திருப்பதி அடுத்த திருச்சானூர் கோயில் பிரம்மோற்சவத்தின் 6ம் நாளான இன்று காலை சர்வ பூபால வாகனத்தில் பத்மாவதி தாயார் மாட வீதியில் பவனி வந்தார். திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5ம் நாளான நேற்றிரவு கஜ வாகன உற்சவம் நடந்தது. ஆறாம் நாளான இன்று காலை சர்வ பூபால வாகனத்தில் பத்மாவதி தாயார் மாட வீதியில் பவனி வந்தார். ஏராளமான பக்தர்கள், தாயாரை பக்தியுடன் தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து இன்று மாலை மகா தேரோட்டமும் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான கருட சேவை இரவு நடைபெறுகிறது.

கருட சேவை உற்சவத்தில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதற்காக திருப்பதி மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவதால் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் குடிநீர், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நாளை காலை சூரிய பிரபை, இரவு சந்திர பிரபை வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி வர உள்ளார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» திருச்சானூர் பிரம்மோற்சவம் : 5வது நாள் கஜ வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி
» திருச்சானூர் கோவில் பிரமோற்சவம்: தங்க ரதத்தில் பத்மாவதி தாயார் பவனி
» தி.மலை தீப திருவிழா 4வது நாள் உற்சவம் : நாக வாகனத்தில் சந்திரசேகரர் பவனி
» திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவம் 18–ந்தேதி தொடங்குகிறது
» திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum