Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


தி.மலை தீப திருவிழா 4வது நாள் உற்சவம் : நாக வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

Go down

தி.மலை தீப திருவிழா 4வது நாள் உற்சவம் : நாக வாகனத்தில் சந்திரசேகரர் பவனி Empty தி.மலை தீப திருவிழா 4வது நாள் உற்சவம் : நாக வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

Post by oviya Sun Dec 07, 2014 9:30 am

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவின் 4ம் நாள் உற்சவமாக, நேற்று காலை நாக வாகனத்தில் சந்திரசேகரர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு உற்சவத்தில் மிக பிரமாண்டமான வெள்ளி கற்பக விருட்சத்தில், அண்ணாமலையார் பவனி வந்தார். அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா உற்வசம் விமரிசையாக நடந்து வருகிறது. திருவண்ணாமலை நகரமே விழாக்கோலமாக காட்சியளிக்கிறது. மாட வீதியில் திரும்பிய திசையெங்கும் பக்தர்கள் வெள்ளத்தால் நிறைந்துள்ளது. அலங்கரிக்கப்பட்டுள்ள அண்ணாமலையார் கோயிலில், சுவாமி தரிசனத்துக்காக பக்தர் கூட்டம் அலைமோதுகிறது.

தீபத்திருவிழாவின் 4ம் நாள் உற்சவம் நேற்று விமரிசையாக நடந்தது. இதையொட்டி, உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பூஜைகள் நடந்தன. காலை 10.40 மணியளவில், ராஜகோபுரம் எதிரில் அமைந்துள்ள 16 கால் மண்டபத்தில் இருந்து மேளதாளம் முழங்க, 4ம் நாள் காலை உற்சவம் தொடங்கியது. மேளதாளம் முழங்க வான வேடிக்கைகளுடன் மூஷிக வாகனத்தில் வினாயகரும், நாக வாகனத்தில் சந்திரசேகரரும் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் மாட வீதியில் திரண்டிருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

பிற்பகல் 3 மணியளவில், அண்ணாமலையார் கோயில் சக்தி விலாச சபா மண்டபத்தில் சமய சொற்பொழிவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, நேற்று இரவு உற்சவம் இரவு 10.30 மணியளவில் தொடங்கியது. வெள்ளி மூஷிக வாகனத்தில் வினாயகரும், வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியரும், பிரமாண்டமான வெள்ளி கற்பக விருட்சத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரும், வெள்ளி காமதேனு வாகனத்தில் பாராசக்தி அம்மனும், வெள்ளி இந்திர விமானத்தில் சண்டிகேஸ்வரரும் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» திருச்சானூர் பிரம்மோற்சவம் : 5வது நாள் கஜ வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி
» சர்வ பூபால வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி
» கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி : இன்று இரவு கருடசேவை
» ஏழுமலையான் கோயிலில் 3 நாள் வசந்த உற்சவம் : கோலாகல தொடக்கம்
» ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 9 நாள் ஊஞ்சல் உற்சவம் இன்று தொடங்குகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum