சோலைமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
Page 1 of 1

முருகனின் 6–வது வீடான சோலைமலை கோவில் சூரசம்ஹாரம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டம், அழகர்மலையில் உள்ள ஆறாவது படைவீடு என்னும் சோலைமலை முருகன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமானது கந்த சஷ்டி திருவிழாவாகும். இந்த விழாவானது, கடந்த 24–ம் தேதி காலையில் விக்னேஸ்வரர் பூஜையுடன் தொடங்கியது. தினமும் லட்சார்ச்சனையும், யாக சாலை பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து அன்னம், காமதேனு, யானை, ஆட்டுக்கிடாய் போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்தது. உற்சவர் வள்ளிதெய்வானை சமேத சோலைமலை முருகனுக்கு தினமும் பால், பழம், பன்னீர் உள்பட பல் வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 29–ம் தேதி நேற்று (புதன்கிழமை) சூரசம்ஹாரம் நடந்தது. இதையொட்டி காலையில் மகாஅபிஷேகம், தீபாராதனை, குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. தொடர்ந்து மாலை 3–மணிக்கு வேல்வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து வெள்ளி மயில் வாகனத்தில் முருகபெருமான் எழுந்தருளி ஈசான திக்கிலிருந்து கஜமுகாசூரனையும், அக்கினிதிக்கிலிருந்து சிங்க முகாசூரனையும் முருகன் சம்ஹாரம் செய்தார். ஸ்தல விருட்சமான நாவல் மரத்தின் அருகில் பத்மாசூரனை முருகபெருமான் சம்ஹாரம் செய்தார்.
அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் உணர்ச்சி பெருக்குடன் அரோகரா கோஷமிட்டு வணங்கியது கண்கொள்ளா காட்சியாக காணப்பட்டது. பின்னர் அங்குள்ள சோபன மண்டபத்தில் முருகனுக்கு சாந்தா பிஷேகம் நடந்தது. இந்த விழாவை காண சுற்று வட்டாரங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். முன்னதாக பக்தர்களுக்கு தினமும் அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று 30–ம் தேதி (வியாழக்கிழமை) திருக்கல்யாணம் உற்சவம் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி வரதராஜன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» வழிகாட்டி முருகன் கோவிலில் கார்த்திகை தீபவிழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
» அழகர்கோவில் சோலைமலை முருகன் கோவிலில் திருக்கல்யாண திருவிழா
» திருப்பரங்குன்றம் கோவிலில் நாளை சூரசம்ஹாரம்: பக்தர்கள் குவிகிறார்கள்
» குலசை முத்தாரம்மன் கோவிலில் இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம்: பக்தர்கள் குவிந்தனர்
» பொள்ளாச்சி சுப்பிரமணியசாமி கோவிலில் 29–ந் தேதி சூரசம்ஹாரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya