Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


நவராத்திரி ஐந்தாம் நாள் (28-9-14)

Go down

நவராத்திரி ஐந்தாம் நாள் (28-9-14) Empty நவராத்திரி ஐந்தாம் நாள் (28-9-14)

Post by oviya Fri Dec 05, 2014 12:56 pm

நவராத்திரி ஐந்தாம் நாளான இன்று (ஞாயிற்றுக் கிழமை) அன்னையை, சும்பன் எனும் அசுரனின் தூதுவனான சுக்ரீவன் வந்து சந்தித்து பேசுவான். அவனது தூது பேச்சை கேட்டப்படி அன்னை சிம்மாசனத்தில் வீற்றிருப்பாள்.

அந்த சமயத்தில் அவளது தோற்றம் புன்னகை ததும்ப காட்சி அளிப்பதாக இருக்கும். இத்தகையை வடிவத்தில் இன்று அன்னையை அலங்கரித்து வழிபட வேண்டும். இந்த அலங்காரத்தில் அன்னையை மோகினி என்பார்கள்.

வைஷ்ணவி என்றும் மகாகாளி என்றும் இந்த அவதாரத்தை சொல்வதுண்டு. எனவே காளிக்குரிய பாரிஜாத மலர் கொண்டு அன்னையை வழிபட வேண்டும். அப்போது நீலாம்பரி ராகத்தில் அன்னையை துதித்து பாடினால் காளிதேவி ரசித்து கேட்டு மகிழ்ச்சி அடைவாள்.

அன்று அன்னை முன்பு மூக்கு கடலை கொண்டு பறவைகள் போல் கோலமிட வேண்டும். 6-வயது குழந்தையை அம்மனாக பாவித்து வழிபட வேண்டும். அந்த சிறுமிக்கு இலவங்கப்பட்டையும் சந்தனமும் கொடுக்கலாம்.

சிலர் தாமிரம் கொடுப்பதுண்டு. அன்றைய தினம் அம்பாளை பவளமல்லி மற்றும் சாம்பல் நிற இலைகள் கொண்டு பூஜிப்பது அதிக பலன்களை தரும். அது போல அம்பாளை மாதுளம் பழம் படைத்து வழிபடலாம். நைவேத்திய வகைகளில் தயிர் சாதம் படைக்க வேண்டும்.

இன்றைய வழிபாடு அனைத்து வகை செல்வங்களையும் கொண்டு வந்து நமக்கு தரும். மேலும் நீங்கள் எந்த செல்வம் வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அல்லது ஆசைப்படுகிறீர்களோ அவை அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum