Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


முதல் நாள் மகேஸ்வரி அலங்காரம் (24.9.14)

Go down

முதல் நாள் மகேஸ்வரி அலங்காரம் (24.9.14) Empty முதல் நாள் மகேஸ்வரி அலங்காரம் (24.9.14)

Post by oviya Fri Dec 05, 2014 1:09 pm

நவராத்திரி முதல் நாள் மதுகைடபவதத்துக்கு மூலகாரணமான தேவியை மகேஸ்வரியாக வழிபட வேண்டும். மகேஸ்வரியை அபயவரஹஸ்தத்தோடு, புத்தகம், அட்ச மாலையுடன் `குமாரி' வடிவமாக அலங்கரித்து, மனதில் தியானம் செய்து வணங்க வேண்டும்.

இந்த `குமாரி' தேவிக்கு, மல்லிகை விசேஷம். எனவே மல்லிகை அர்ச்சனை உகந்தது. பிரசாதம்- வெண்பொங்கல். அம்பாள், சங்கீதப்பிரியை ஆயிற்றே... எனவே, தினமும் சுவாரஸ்யமான சங்கீதம் வீட்டில் தவழ்ந்தால் சுபிட்சம் பெருகும்.

இந்த முதல் நாளில் தோடி ராகத்தில் அமைந்த கீர்த்தனைகளை பாடினால் விசேஷம். குமாரி இரண்டு வயதுக் குழந்தையாய் இருப்பாள். பிரதமை திதியில் இரண்டு வயதுக் குழந்தையை (தன் வீட்டுக் குழந்தை அல்ல) அழைத்து வந்து அவளை அன்னை குமாரியாகவே பாவித்து, அவளுக்கு ஆடை, அலங்காரங்கள் செய்து, பாத பூஜை செய்து வணங்க வேண்டும்.

குழந்தைக்கு அணிவித்த ஆடை, அணிகலன்களைத் திரும்ப வாங்கி விடக்கூடாது. இன்று தேவி பாகவதத்தின் முதல் அத்தியாயத்தையும், ஸ்ரீலலிதா சகஸ்ர நாமத்தையும், நவாஷரி மந்திரத்தையும் ஓதித் துதித்தால் குமாரி தேவியின் அருள் பரிபூரணமாய்க் கிட்டும்.

பிரதமை திதியில் நாம் வணங்கும் குமாரி தேவி நமக்கு குறைவற்ற வாழ்வு தருவாள். குழந்தையின் கள்ளம், கபடமற்ற மன நிலை நமக்கு வந்தால்தான் இறைவனை நாம் அடைய முடியும். மகேஸ்வரி சிவனின் சக்தி.

வெள்ளை நிறம் கொண்டவள். இவளுக்கு ஐந்து முகம் உண்டு. இந்த முகங்கள் ஒவ்வொன்றிலும் மூன்று கண்கள் கொண்டிருப்பாள் என்று விஷ்ணு தர்மோத்திரா புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இவளுக்கு மொத்தம் 10 கைகள்.

வலது பக்க 5 கைகளில் அபய முத்திரை, வாள், வஜ்ரம், திரிசூலம், பரசு ஏந்தி இருப்பாள். இடதுபக்க 5 கையில் வரத முத்திரை, பாசம், மணி, நாகம், அங்குசம் இடம் பெற்றிருக்கும். இவளது தலையில் ஜடா மகுடம் காணப்படும். அதில் பிறைச் சந்திரனை சூடி இருப்பாள். மகேஸ்வரி எருதை வாகனமாகக் கொண்டவள்.

மது கைடபரை வதம் செய்தாள் :

கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும்போது இல்லத்தில் அம்பிகை வழிபாட்டை நடத்தினால் இல்லத்தில் நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை. எனவே நவராத்திரியின் 9 நாட்களிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அம்பிகைக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.

மகேஸ்வரிக்கு உகந்த நாள் கல்ப காலத்தின் இறுதியில் உலகத்தைப் பிரளயம் சூழ்ந்தது. மகா விஷ்ணு ஒரு சிறு குழந்தையாக சேஷசயனத்தில் யோக நித்திரையில் ஆழ்ந்திருக்க, மது கைடபர் என்ற இரு அரக்கர்கள் எக்களிப்பில் திருமாலின் உந்தியிலிருந்து உதித்த பிரமனுடன் போர் புரியத் தொடங்கினர்.

பிரமன் பராசக்தியை மகாதேவி மகாமாயை, மகா புத்தி, மகாவித்யை என்றெல்லாம் போற்றித் துதித்து இவ்விரு அசுரர்களை மயக்கி, உலகைக் காத்தருள வேண்டினார்.

அம்பிகை மகாவிஷ்ணுவின் யோக நித்திரையிலிருந்து வெளிப்பட்டு மது கைடபர்கள் இருவரையும் தம் தொடை மீதே வைத்து தனது சக்ராயுதத்தால் மகாவிஷ்ணு வதம் செய்யக் காரணமாக இருந்தார். பச்சை வண்ணப் பட்டாடைகளையும், பச்சை கலந்த ஆரபணங்களையும் அணிவிக்கலாம்.

முல்லை, செவ்வந்தி, பாரிஜாத மலர்களை மாலையாக்கி அணிவிக்கலாம். இன்று எள் சாதம், எள் பாயாசம், வேர்க்கடலை சுண்டல் வைத்து பூஜை செய்யலாம். அதையே வருபவர்களுக்கும் பிரசாதமாக வழங்கலாம்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum