Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா : இன்று இரவு பெரிய தேர் பவனி

Go down

வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா : இன்று இரவு பெரிய தேர் பவனி Empty வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா : இன்று இரவு பெரிய தேர் பவனி

Post by oviya Sun Dec 07, 2014 9:02 am

நாகை: வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவில் இன்றிரவு பெரிய தேர் பவனி நடக்கிறது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுபெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் கொடியை புனிதம் செய்து வைத்து கொடி ஏற்றப்பட்டது. பின்னர் பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து நற்கருணை ஆசீர்,
தமிழில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

இன்று மாலை 5.15 மணியளவில் பேராலய கலையரங்கில் தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம் நடைபெறுகிறது. பின்னர் இந்தியாவிற்கான திருத்தந்தையின் தூதர் டாக்டர்.சால்வத்தோரே மென்னாக்கியோ, தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் ஆகியோர் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு பெரிய தேர் பவனி நடக்கிறது.

நாளை காலை 6 மணியளவில் புனித ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாளையொட்டி, சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது. மாலை 6 மணி அளவில் அன்னையின் கொடி இறக்கப்பட்டு ஆண்டுத்திருவிழா நிறைவடையும். விழாவையொட்டி, வேளாங்கண்ணியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» வேளாங்கண்ணியில் பெரிய தேர் பவனி: திரளான பக்தர்கள் பங்கேற்பு
» கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி : இன்று இரவு கருடசேவை
» வல்லத்தில் அய்யா தேர் பவனி
» ஆலந்தூரில் ஸ்ரீஐயப்ப சேவா சங்கத்தின் 54ம் ஆண்டு திருவிளக்கு பூஜை
» ஸ்ரீரங்கம் கோவிலில் திருப்பவித்ர உற்சவம் நிகழ்ச்சி இன்று இரவு நடக்கிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum