Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


எனது கண­வரைக் கொன்­ற­வருக்கு கூடிய தண்­டனை வழங்க வேண்டும்!- நகுலேஸ்வரனின் மனைவி சாட்­சியம்

Go down

எனது கண­வரைக் கொன்­ற­வருக்கு கூடிய தண்­டனை வழங்க வேண்டும்!- நகுலேஸ்வரனின் மனைவி சாட்­சியம் Empty எனது கண­வரைக் கொன்­ற­வருக்கு கூடிய தண்­டனை வழங்க வேண்டும்!- நகுலேஸ்வரனின் மனைவி சாட்­சியம்

Post by oviya Fri Dec 12, 2014 1:02 pm

எனது கண­வரை கொன்­ற­வரை சட்­டத்தின்முன் நிறுத்தி கூடிய தண்­டனை வழங்க வேண்டும் என மன்னாரில் சுட்டுக் கொல்லப்பட்ட கிருஷ்ணசாமி நகுலேஸ் வரனின் மனைவியான நகுலேஸ்வரன் கவிதா நீதிமன்றில் சாட்சியமளிக்கையில் கோரிக்கை விடுத்தார்.
மன்னார் மாந்தை மேற்கு பிர­தேச செய­லாளர் பிரி­வுக்­குட்­பட்ட வெள்ளாங்­குளம் கணே­ச­புரம் கிரா­மத்தில் உள்ள ஈசன் குடி­யி­ருப்பு பகு­தியில் குடும்­பத்­துடன் வசித்து வந்த விடு­த­லைப் ­பு­லி­களின் காவல் துறையில் கட­மை­யாற்றி பின் அர­சிடம் புனர்­வாழ்வு பெற்று குடும்­பத்­துடன் வாழ்ந்த நப­ரான கிருஷ்­ண­சாமி நகு­லேஸ்­வரன் (40) கடந்த மாதம் 12 ஆம் திகதி வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதன் வழக்கு நேற்று முன்­தினம் புதன் கிழமை மன்னார் நீதி­மன்றில் நீதி­பதி செல்வி ஆனந்தி கன­க­ரட்ணம் முன்­னி­லை யில் விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டது.

அச்­ச­மயம் பயங்­க­ர­வாதத் தடுப்பு பிரிவு பொலிஸார் இக் கொலை தொடர்­பாக ஒரு கிராம அலு­வ­லகர் உட்­பட ஏழு சந்­தேக நபர்­களை மன்னார் நீதி­மன்றில் ஆஜ­ராக்­கினர்.

அத்­துடன் இவ் வழக்கில் இறந்­த­வரின் மனைவி உட்­பட மூன்று பேர் மன்றில் சாட்­சியம் அளித்­தனர்.

இறந்­த­வரின் மனைவி நகு­லேஸ்­வரன் கவிதா (வயது 37) நீதி­மன்றில் தனது சாட்­சி­யத்தில், நான் 1997ஆம் ஆண்டு தொடக்கம் ஒரு தொண்டர் ஆசி­ரி­யை­யாக இருந்து பின் 2001 ஆம் ஆண்­டி­லி­ருந்து ஒரு நிரந்­தர ஆசி­ரி­யை­யாக வெள்ளாங்­குளம் றோமன் கத்­தோ­லிக்க தமிழ் கலவன் பாட­சா­லையில் கடமை புரிந்து வரு­கின்றேன்.

எனக்கு இரண்டு பிள்­ளைகள் உள்­ளனர். மூத்­தவள் மகள் (வயது 11) அடுத்­தது மகன் (வயது Cool கடந்த 12.11.2014 அன்று இரவு 8.25 மணி­ய­ளவில் எனது கணவர் சுட்டுக் கொல்­லப்­பட்டார். சம்­பவ நேரம் எனது மகள் படித்துக் கொண்­டி­ருந்தாள். நான் சமையல் அறைக்குள் ரொட்டி சுட்டுக் கொண்­டி­ருந்தேன். மகன் ஒப்­படை செய்து விட்டு எனக்கு காட்டிக் கொண்­டி­ருந்தான்.

அச்­ச­மயம் எனது கணவர் எங்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட வீட்டுத் திட்­ட­த்துக்­காக கல் அரி­வ­தற்­காக வெளியில் மூன்று ரியூப் லைற் எரி­ய­விட்டு எனது தம்­பி­யு­டனும் எனது மைத்­து­னியின் கண­வ­ரு­டனும் கல் அரிந்து கொண்­டி­ருந்­தார்.

அவ்­வே­ளையில், திடீ­ரென அருகில் வெடிச் சத்தம் கேட்­டது. இச் சத்தம் என்­ன­ வென்று நான் கேட்­பதற்கு முன் 'அக்கா ஓடி வா அக்கா ஓடி வா' என எனது தம்பி சத்தம் போட்டான்.

உடனே நான் ஓடிப்போய் பார்த்­த­போது எனது கணவர் வலது பக்­க­மாக விழுந்து கிடந்தார். அப்­பொ­ழுது அவரின் தலை­யி­லி­ருந்து இரத்தம் குமு குமு என பாய்ந்­தது. நானும் தம்­பியும் அக் காயத்தை ஒரு துணியால் பொத்தி பிடித்தோம். அந்­நேரம் எனது கண­வரின் உட­லி­லிருந்து எவ்­வி­த­மான அசை­வு­களும் இருக்­க­வில்லை.

இதை­யிட்டு நாங்கள் சத்தம் போட்­ட தைத் தொடர்ந்து அய­ல­வர்கள் ஓடி வந்து எங்­க­ளுடன் சேர்ந்து அழு­தார்கள். அத்­து டன் அந்த நேரம் பொலி­ஸா­ருக்கு கைய­டக்க தொலை­பே­சியின் மூலம் தகவல் கொடுக்க எனக்கு கையும் காலும் ஓட­வில்லை. பின் பக்­கத்தில் இருந்­த­வ­ரிடம் எனது போனைக் கொடுத்து பொலிஸ் நம்­பரை எடுத்து நான்தான் பொலி­ஸா­ருக்கு தகவல் கொடுத்தேன்.

இந்தச் செய்­தியைக் கேட்டு பொலி­ஸா ரும் உடனே சம்­பவ இடத்­துக்கு வந்து விட்டனர். அச் சமயம் இச் சம்­பவம் யாரால் நடத்தப்பட்டது என்­பது எனக்குத் தெரி யாது. உடல் கிடந்த இடத்­திலே இருக்க அடுத்த நாள் நீதி­பதி வந்து பார்­வை­யிட்ட பின்பே அவரின் உத்­த­ர­வுக்­க­மைய எனது கண­வரின் உடலை அனு­ரா­த­புர வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச் சென்­றனர். நான் அனு­ரா­த­பு­ரத்­துக்கு போக­வில்லை. எனது உற­வினர் போயி­ருந்­தனர்.

இவ் மரணம் தொடர்­பாக நான் பொலி­ஸா­ருக்கு வாக்­கு­மூலம் கொடுத்தேன். இறந்­தவர் எனது கண­வர்தான் என்று நான் நீதி­ப­திக்கு முன் அடை­யாளம் காட்­டியி­ருந்தேன். துப்­பாக்­கியால் சுடப்­பட்­டுத்தான் எனது கணவர் இறந்­துள்ளார் என்­பது தெரியும்.

தலையில் துப்­பாக்­கியால் சுடப்­பட்ட இடம் சிறி­ய­தா­கவும் சன்னம் வெளியே­றிய இடம் பெரிய­தா­கவும் காணப்­பட்­டது என்றார்.

கேட்­கப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு பதில் அளித்­ததைத் தொடர்ந்து நீதி­பதி சாட்­சியை நோக்கி வேறு எதுவும் சொல்­வ­தற்கு இருக்­கின்­றதா எனக் கேட்­ட­போது சாட்சி எனது கண­வரைக் கொன்­ற­வரை சட்­டத்தின் முன் நிறுத்தி கூடிய தண்­டனை வழங்க வேண்டும் என மன்­றிடம் தெரிவித்தார்.

சண்­முகம் செல்­வ­ரட்ணம் (வயது 45) என்பவர் இக் கொலை தொடர்­பாக மன்றில் சாட்­சியம் அளிக்­கையில்,

நான் 17 வரு­டங்­க­ளாக இப் பகு­தி­யி­லேயே வசித்து வரு­கின்றேன். நான் மேசன் தொழில் புரிந்து வரு­கின்றேன். இறந்­த­வ­ருடன் நாங்கள் மூன்று பேர் சீமெந்து கல் அரிந்து கொண்­டி­ருந்தோம்.

இறந்­தவர் கல்­லுக்­கான மணலும் சீமெந்தும் கலவை போட்டுக் கொண்­டி­ருந்தார். நாங்கள் இரவு 7 மணி தொடக்கம் 8.30 மணி வரை கல் அரிந்து கொண்­டி­ருந்தோம். அந்­த­ நேரம் வீட்­டி­லி­ருந்து மின்­சாரம் எரிய ­விட்­டி­ருந்தோம். இரவு 8.30 மணி­யி­ருக்கும் வெடிச்­சத்தம் கேட்­டது. அப்­பொ­ழுது இறந்த நகு­லேஸ்­வ­ரனைப் பார்த்­த­ போது பின் பக்­க­­மாக விழுந்து கிடந்தார்.

அப்­பொ­ழுது அவரின் தலை­யாலும் காதாலும் இரத்தம் வந்து கொண்­டி­ருந்­தது. அப்­பொ­ழுது இறந்­த­வரின் மனை­வியின் சகோ­தரர் அக்கா ஓடி வா அக்கா ஓடி வா என சத்தம் போட இறந்­த­வரின் மனைவி சம்­பவ இடத்­துக்கு ஓடி வந்தார்.

உடனே அவரை பாயில் கிடத்­தினோம். இது விட­ய­மாக இறந்­த­வரின் மனைவியே பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். அவருக்கு வெடிபட்டே இறந்துள்ளார் என் பது எனக்குத் தெரியும். வெடி யாரால் நடத்தப்பட்டது என்பது எனக்குத் தெரியாது.

நீதிபதி சடலத்தைப் பார்த்தபின் அனுராதபுர வைத்தியசாலைக்கு சட்ட வைத்திய பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல உத்தரவிட்ட போது நானும் அங்கு சென்றேன் என்றார்.

இவ்வாறு இறந்தவரின் மனைவியின் சகோதரன் ராஜகோபால் வாகீஸ்தனும் இவ் மரணம் தொடர்பாக சாட்சியம் அளித்தார்.


oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜனாதிபதி தேர்தலுக்கு அடையாள அட்டைகளை பெற 15ம் திகதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்!- அடையாள அட்டை வழங்க முதலாவது நடமாடும் சேவை
» பொது எதிரணியினருக்கு மண்டபங்களை வழங்க மறுக்கும் பிரபல ஹொட்டல்கள்
» மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்க வேண்டாம்! இனவாத அமைப்பிடம் கெஞ்சிய வீரவன்ஸ
» புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு வாக்குரிமை வழங்க முடியாது: டலஸ் அழகப் பெரும
» ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு இன்று- மைத்திரிக்கு ஆதரவு வழங்க தீர்மானம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum